By Village Missionary Movement
Sunday, 11-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 11.01.2026
மன்னிக்கும் தேவன்
“மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” - சங்கீதம் 103:12
ஒரு பசுமையான கிராமத்தில் பெரிய மரங்கள், வயல்வெளிகள், தோட்டம், குளம் என்று பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அந்த வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச pump set வேறு. என்ன குட்டீஸ், கேட்கவே ஆசையா இருக்குதுல. கிராமத்து வாழ்க்கையே மிக அமைதியான, அழகான, சந்தோஷமான, எளிமையான வாழ்க்கை. அந்த கிராமத்தில் அப்பா, அம்மா, அக்கா, தம்பின்னு ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தாங்க. அக்காவுக்கு love birdsனா ரொம்ப பிடிக்கும், அப்பாவும் வாங்கிக் கொடுத்தாங்க. Daily சாப்பாடு போடுவது, தண்ணீர் கொடுப்பது, சுத்தம் பண்றது இந்த வேலைகளையெல்லாம் ஆசையாக அக்கா செய்வாள். மாலை நேரத்துல home work முடித்து விட்டு, தம்பியும், அவனோட friends -ம் சேர்ந்து ball விளையாடிக் கொண்டிருந்தாங்க. திடீரென்று வேகமாய் வந்த ball …..... ‘சடார்னு’ அடிச்சுது பாருங்க. அக்கா ஓ..வென அழ ஆரம்பித்தாள். Friends எல்லாம் ஓடியே போயிட்டாங்க. ஐய்யய்யோ! அக்கா தலையில் அடிபட்டு விட்டதே என தம்பி ஓடி வந்து பார்த்தான். ஒரு love bird இறந்து கிடந்தது.
அடுத்த நாளிலிருந்து அப்பா வியாபாரத்திற்காய் வெளியூர் போய்விட்டார். டே தம்பி, இங்கே வா தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றாள் அக்கா. போக்கா நான் விளையாடிக் கொண்டிருக்கேன் வரமாட்டேன் என்று சொன்னான் தம்பி. நேற்று நடந்ததை அப்பாவிடம் சொல்லிடுவேன் (love bird) என்று சொல்லி, சொல்லியே வேலை வாங்கினாள் அக்கா. இப்படியே பத்து நாள் போனது. அப்பாவும் வீட்டிற்கு வந்தார். தம்பி ஓடிப் போய் அப்பாவிடம் என்னை மன்னித்திடுங்கப்பா என்றான். அப்பா நடந்தது என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டார். பரவாயில்லை, வேற love bird வாங்கித் தருகிறேன் என்று சொன்ன அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு Thanks பா என்றான். இதே போல தான் குட்டீஸ், நாம செய்த தவறுகளை மறைக்காமல் இயேசப்பாவிடம் சொல்லி, அதை விட்டு விட முயற்சி செய்யும் போது, நம் பாவங்களையெல்லாம் மன்னித்து மறக்கின்ற தேவனாய் அவர் இருக்கிறார். உங்களை மன்னிக்க ஆயத்தமாய் இருக்கின்ற இயேசப்பாவிடம் நீங்க ஏன் தவறுகளை மறைக்கணும்? குட்டீஸ், இப்பவே மன்னிப்பு கேளுங்க. யாரும் தரமுடியாத சந்தோஷம் உங்க உள்ளத்தை நிரப்பும் என்பதை taste பண்ணி பாருங்க குட்டீஸ், o.k bye.
- Sis. பிளஸ்ஸி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864