Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.01.2026
Share:

By Village Missionary Movement

Saturday, 10-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 10.01.2026

 

பரிசுத்தத்தைக் காத்துக்கொள்      

 

"அதற்கு அவன்: (போவாஸ்) மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக;...” - ரூத் 3 :10

 

ரூத்தின் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் இத்திருவசனம், ரூத்தின் மாமியாகிய நகோமி, தன் விதவை மருமகளின் வாழ்வு மீண்டும் கட்டப்பட எடுத்துக்கொண்ட ஒரு சிறிய முயற்சியாக உள்ளது. ரூத், முறையான ஆசீர்வாதமான வாழ்வு வாழ நகோமி விரும்புகிறார். எனினும் அம்முயற்சி, போவாஸ் என்ற ஆண்டவரின் அடியாருக்கு சோதனையின் இரவாக மாறியது. அவர் அதை மேற்கொண்டதைப் பற்றிப் பார்ப்போம்.

 

போவாஸ், இஸ்ரவேல் மக்களின் முறைப்படி அறுவடை நாட்களில் இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் ஆடி, பாடி, புசித்து, குடித்து ஓய்வெடுக்கிறார். அந்நேரத்தில் ரூத் அவர் காலடியிலே படுத்திருக்கிறாள். போவாஸ், இச்சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் போவாஸ் தன்னை பரிசுத்தமாக காத்துக்கொண்டார். மேலும் ரூத்தை இருமுறை மகளே என்று அழைக்கிறார். எத்தனை மேன்மையான பரிசுத்தம் பாருங்கள்.

 

நம் சுற்றுச் சூழல்கள் அனைத்தும் பரிசுத்தமாய் இருக்கும்போது நாம் பரிசுத்தமாய் இருப்பது பெரிய காரியமல்ல. எதிர் மாறான சூழலில் நம்முடைய எழுச்சிகள், உள்ளுணர்வுகள் எப்படி உள்ளது என்பதை ஆண்டவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். எல்லாச் சூழலிலும் நம்முடைய எண்ணங்கள், விருப்பங்கள், கற்பனைகள் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென ஆண்டவர் எதிர்பார்க்கிறார். நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் தீட்டுப்படுமாயின் அத்துடன் நம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி நின்று போகும்.

 

யோசேப்புக்கு ஏற்பட்ட சோதனை (ஆதி. 39: 12) ஒரு சில நிமிடங்களே, அதனின்று அவர் தப்பி ஓடினார். ஆனால் போவாஸின் சோதனை இரவு முழுக்க நீடித்தது. போவாஸ் தன் பரிசுத்த எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், செயலினாலும் அதை மேற்கொண்டார். எத்தனை உயர்வான பரிசுத்தம் பாருங்கள்! தாவீதைப் பாருங்கள், எத்தனை பெரிய தீர்க்கதரிசி, சங்கீதக்காரர், விசுவாசி, ஆனால் சோதனையில் விழுந்து போனார்.

 

ஆண்டவரின் அன்பு பிள்ளையே, ஒவ்வொரு நாளும் நமக்கு சோதனைகள் வருகிறது. ஆண்டவரின் பிள்ளைகளை வழிவிலகச் செய்வதே பிசாசின் நோக்கம். ஆகவே விழித்திருந்து ஜெபியுங்கள். வசனத்தைப் பிடித்துக்கொண்டு பரிசுத்த வாழ்வு வாழ ஆண்டவர் தாமே நமக்கு துணை செய்வாராக!           

- Mrs. .எலிசபெத்    

 

ஜெபக்குறிப்பு:  

ஆரம்பிக்கப்பட்டுள்ள 12 Kids Club தடையில்லாமல் செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al