Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.01.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 08-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 08.01.2026

 

குடும்பம் கர்த்தருக்கு                             

 

"...நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்" - யோசுவா 24:15

 

கடந்த ஆண்டு முழுவதும் ஆண்டவர் நம்மை வழிநடத்தி ஜீவனோடு வைத்திருக்கிறார். புதிய ஆண்டில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த ஆண்டில் என்ன தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள்? யோசுவாவின் தீர்மானம் போல நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம் என்றா? வீட்டார் என்று சொல்லும்போது, வீட்டில் இருக்கிற பிள்ளைகள் கர்த்தரை சேவிக்க கற்றுக் கொடுப்போம் என்று தீர்மானம் எடுங்கள். சங்கீதம் 22: 30 ல் ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும். தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி எனப்படும். நம் தலைமுறை ஆசீர்வாதமாக இருக்க பிள்ளைகளுக்கு கர்த்தரை சேவிக்க, பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். பிள்ளைகளை தேவ பக்தியில் வளர்க்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் பிள்ளைகள் ஜெபிக்கிறார்களா? வேதம் வாசிக்கிறார்களா? என்று நாம் கவனிக்கத் தவறுகிறோம். பெற்றோராய் நாம் பிள்ளைகளுக்கு கொடுக்க கூடிய பெரிய சொத்து தேவனுக்கு பயப்படும் பயத்தைக் கற்றுக்கொடுப்பதே! இதை கற்றுக்கொண்டார்களானால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் யோசேப்பு போல, தானியேல் போல தங்களை காத்துக் கொள்வார்கள்.      

 

தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடி என்ற இடத்திற்கு சுவிடன் தேசத்திலிருந்து மிஷனெரியாக வந்த சீகன் பால்க் என்பவருக்கு தாய் கொடுத்த சொத்து வேத புத்தகம். அதை அவர் முதன்முதலில் தமிழில் அச்சடித்து கொடுத்தார். இந்த புதிய ஆண்டில் யோசுவாவைப் போல உங்கள் வீட்டாரை ஒப்படைத்து தீர்மானம் எடுங்கள். என்னுடைய பிள்ளைகளை கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர்ப்பேன். அதற்கு முன்மாதிரியாக தினமும் நான் வேதம் வாசிப்பேன். தானியேலைப் போல தினமும் குறைந்தது மூன்று முறையாவது ஜெபிப்பேன், தினமும் குடும்ப ஜெபம் பண்ணுவேன். அதில் பிள்ளைகளை வேதம் வாசிக்க, ஜெபம் பண்ண வைப்பேன். என் சரீரமாகிய வீட்டை முழுவதுமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பேன். இந்த ஆண்டில் குடும்பமாக திருச்சபையின் ஆராதனையில் பங்கு பெற, ஊழியம் செய்ய தீர்மானியுங்கள். அப்பொழுது இந்த ஆண்டு முழுவதும் உங்களையும், உங்கள் பிள்ளைகளையும், உங்கள் தலைமுறையையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். ஆமென்.

- Mrs. ஜோதிநாயகம்

 

ஜெபக்குறிப்பு: 

எல்லா தாலுக்காவிலும் 12 Kids Club ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al