Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.01.2026
Share:

By Village Missionary Movement

Monday, 05-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 05.01.2026

 

காலத்தை முதலீடு செய்யுங்கள்                

 

“...காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” - கொலோ. 4:5

 

மேலை நாடுகளில் நேரத்தை சேமிக்க நிறுவனங்கள் உண்டு. எப்படியென்றால் இன்றைக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் வேலை ஸ்தலத்தில் ஓய்வு கிடைக்குமானால், அதை அந்த நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அந்த நேரங்களில் தேவையோடிருக்கும் முதியோருக்கு, வியாதிப்பட்டவர்களுக்கு உதவியாக அங்கு நம்மை அனுப்பி வைப்பார்கள். முதியவர்களை வங்கிக்கு, கடைக்கு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற உதவிகளை செய்யலாம். இதற்கு பதிலாக நமக்குத் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் உதவி செய்வார்கள். 

 

இவ்வாறு நேரம் முதலீடு செய்யப்படுகிறது. நமக்கு தினமும் தேவன் 24 மணி நேரத்தைத் தருகிறார். அந்த 24 மணி நேரத்தை நாம் திட்டமிட்டு செலவிட வேண்டும். இந்த புதிய ஆண்டில் கர்த்தருக்கென்று அதிக நேரங்களை செலவிட தீர்மானிப்போம். ஜெபிக்க, வேதம் வாசிக்க, தேவனோடுள்ள தனிப்பட்ட நேரங்களை அதிகரிப்போம், இதன் மூலம் நம் விசுவாசம் பெருகும். இயேசுகிறிஸ்து கூட, இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பிதாவோடு தனிப்பட்ட நேரங்கள் செலவிட வேண்டியதாயிருந்தது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அவர் காண்பித்த மாதிரியின்படி செயல்பட்டார். அதே போல் தேவ சித்தத்தை நாம் நிறைவேற்ற வேண்டுமானால், நாமும் அவரைப்போல இருட்டோடே அதிகாலையிலே எழுந்து தேவ சமுகத்தில் காத்திருப்போம்.

 

நாமும் நம் நேரங்களைக் கர்த்தருக்கென்று பரலோகத்தில் முதலீடு செய்வோம். பகுதிநேரமாய் எங்களோடு இணைந்து நீங்கள் ஊழியம் செய்யலாம். கர்த்தர் பரலோக பொக்கிஷங்களை உங்களுக்குப் பலனாய் வைத்துள்ளார்.  

 

பிரியமானவர்களே, தேவனுக்காக உங்கள் நேரங்களைக் கொடுங்கள். அவைகள் பரலோக கணக்கில் முதலீடாக சேர்த்து வைக்கப்படும். அதனை யாரும் எடுக்கவோ, அழிக்கவோ முடியாது. தேவனுக்கு பயணுண்டாக, தேவனுக்கு பிரியமானவைகளை செய்வோம். அதனால் தேவனிடத்திலிருந்து வரும் பலனைப் பெற்றுக் கொள்வோம். உங்களுடைய விடுமுறை நாட்களில் கைப்பிரதி ஊழியம், சிறுவர் ஊழியம் செய்ய முன்வரலாம். அவ்வாறு செய்வீர்களானால் ஏற்ற சமயத்தில் தேவன் உங்களை உயர்த்துவார். இந்த ஆண்டு உங்கள் நேரத்தை பங்களிப்பாய் கொடுக்க திட்டமிடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு: 

Mission Action Centre என்று எல்லா தாலுகாவிலும் செயல்படும் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al