Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-06-2021
Share:

By Village Missionary Movement

Friday, 11-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 11-06-2021

 

சோர்ந்து போகாதே

 

“…கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” – 2 தீமோத்தேயு 3:12

 

பக்தியான குடும்பம், எந்த குறையுமில்லாத வாழ்க்கை. திடீரென்று வீசின துன்ப புயலில் கணவன் வியாதிப்பட்டு மரித்துப்போனார். அவருடைய சுகத்திற்காக ஜெபித்த ஜெபங்களெல்லாம் வீணாகிவிட்டதே! ஆண்டவரும் என்னை கைவிட்டு விட்டாரே, என மனைவி மிகவும் விரக்தியடைந்து ஜெபிப்பதையே விட்டுவிட்டார். மீண்டும் ஆண்டவரைத் தவிர கதியே இல்லை, அவரில்லாமல் எப்படி இந்த உலகில் வாழமுடியும். அவரது வேத வசனம் தரும் ஆறுதல் வேறு எங்கு கிடைக்கும் என்று உணர்ந்து, மீண்டும் ஆண்டவரைப் பற்றிக்கொண்டார். ஆண்டவர் புதுபெலனையும், நம்பிக்கையையும் கொடுத்து தொடர்ந்து செல்ல உதவி செய்தார். 

 

இந்த நாட்களிலும் எங்கு பார்த்தாலும் மரணங்கள், வியாதி, இழப்புகள், பஞ்சம், பசி, வேலையில்லா திண்டாட்டம், குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை…. இது எதுவரை இருக்கும்? ஏன் இப்படி தேவன் அனுமதிக்கிறார்? இது மாறாதா? எப்போது இந்த நோய்த்தொற்று முடிவுக்கு வரும்? ஏன் என் குடும்பத்தில் இத்தனை இழப்பு? என புலம்பி தவிப்போர் ஏராளமானோர்! நமது அத்தனை கேள்விகளுக்கும் பதில் இயேசு கிறிஸ்துவே! அவரும் சிலுவையில் தொங்கின போது, கைவிடப்பட்டவராக, வேதனையோடு தொங்கிக் கொண்டிருந்தார். என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்! என்று நம்மைப் போலவே கதறுகிறார். ஆகவே அவருக்கு நம் வேதனை நன்றாய் புரியும். நம்முடைய வலியையும், வேதனையையும் அவர் அறிவார். ஆகவே நிச்சயமாய் நமக்கு உதவி செய்வார். ஏனென்றால் அவர் வெற்றி சிறந்தார். நம்மையும் வெற்றி சிறக்க செய்வார். பிசாசையும், அவன் தலையையும் சிலுவையிலே நசுக்கின ஆண்டவர் நாமும் ஜெயமெடுக்கும்படி உதவி செய்வார். ஆகவே இந்த கடினமான இந்த காலத்திலும், பிரச்சனைகளைக் கண்டு சோர்ந்து விடாதபடி அதை சகிக்க, சமாளிக்க பெலனையும், பொறுமையையும் தரும்படி ஜெபிப்போம். பாடுகள் நிரந்தரமல்ல இதுவும் மாறிப்போகும். அல்லேலூயா!

- Mrs. ஜோதி ஆனந்த் 

 

ஜெபக்குறிப்பு:

கிராம மிஷனெரி இயக்கத்தில் உள்ள ஊழியர்களின் அத்தியாவசியத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.  

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş