Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.12.2025
Share:

By Village Missionary Movement

Monday, 29-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 29.12.2025

 

வீண் புகழ்ச்சி

 

"வீண் புகழ்ச்சியை விரும்பாமலும்... இருக்கக்கடவோம்" - கலாத்தியர் 5:26

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் ஓர் அரசன் இருந்தார். அவரது மகளிடம் எல்லோரும் இளவரசி, நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக ரோஜா பூ மாதிரி இருக்கிறீர்கள் என்று புகழ்ந்து பேசுவார்கள். ஆகவே இளவரசி தான் ஒரு அழகி என்று எண்ணி இருந்தாள். ஒருமுறை சில வணிகர்கள் அந்நாட்டிற்கு வந்தார்கள். அரசனின் மகளான அந்த இளவரசிக்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பரிசளித்தனர். இந்த கண்ணாடி உங்கள் உண்மை முகத்தை பிரதிபலிக்கும் என்றார்கள். அவள் அந்த கண்ணாடியை எடுத்து தன் வாழ்க்கையிலேயே முதன்முறையாக தன் முகத்தைப் பார்த்தாள். பார்த்த உடனே தன் முகம் அழகாக இல்லை என்பதை அறிந்து, கோபத்தில் அந்த கண்ணாடியை உடைத்துப் போட்டாள். பிறரது புகழ்ச்சியில் ஏமாந்து போனாள் அந்த இளவரசி.

 

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது இப்படியாக எழுதுகிறார். நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:18)

 

அருமையான தேவபிள்ளையே, நீங்களும் மற்றவர்கள் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள் என்றால் இந்த இளவரசியைப் போல ஏமாற்றம் அடைவீர்கள். உங்கள் உண்மை நிலைமையைப் பிரதிபலிப்பது வேதம் என்ற கண்ணாடியே! நீங்கள் அனுதினமும் வேதத்தை வாசித்து, தியானித்து கர்த்தருடைய மகிமையை, கண்ணாடியில் உங்கள் முகத்தை காண்கிறது போல கண்டு, உங்கள் உள்ளான மனதில் இருக்கிற கோணல்களை, மாசுக்களை, மாம்ச செயல்பாடுகளை சரியாக்குவோம். அவ்வாறு செய்வோமென்றால் நீங்கள் தான் கர்த்தருடைய பார்வையில் விசேஷமானவர்கள், கனத்திற்குரியவர்கள், அழகானவர்கள். உங்களுக்கு மனுஷரால் வரும் புகழ் ஆபத்தை விளைவிக்கும். தேவனால் புகழ்ச்சி உண்டாகும் என்றால் உள்ளத்திலே யூதனானவனே யூதன்; ஆவியின் படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் (ரோமர் 2:29). நீங்கள் தான் உண்மையான இளவரசிகள்! இளவரசர்கள்!

- R. சலோமி

 

ஜெபக்குறிப்பு:-

You tube ல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்மணி T.V க்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al