By Village Missionary Movement
Monday, 22-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 22.12.2025
முழு உலகத்திற்கும் நற்செய்தி
"அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று... பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" - லூக். 2:7
உலகிலே அனுதினமும் பல விதமான செய்திகளை கேட்டுக்கொண்டே இருக்கிறோம். நாம் கேட்கிற செய்திகள் எல்லாருக்கும் அது நற்செய்தியாக இருப்பதில்லை. மேலும் அநேக நேரங்களில் அது நமக்கு வேதனை தரும் செய்தியாக, கவலை அளிக்கும் செய்தியாக, மற்றவர்களிடம் சொல்ல முடியாத செய்தியாகத்தான் இருக்கின்றது. ஆனால் 2000 ம் ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி ஆடு மேய்க்கும் மேய்ப்பர்களிடம் சொல்லப்பட்டது, அது எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம் தரும் நற்செய்தி.
இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் மேய்ப்பர்களுக்கு பெரிய மதிப்போ, மரியாதையோ இல்லை. அவர்கள் மற்ற சக மனிதர்களால் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களுடைய வாழ்க்கை அதிகமாக காடுகளிலும், மலைகளிலும் காணப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு அந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. அதுதான் இயேசுவின் பிறப்பின் நற்செய்தி
ஒரு வேளை இந்த நற்செய்தி நாட்டிற்குள் வாழும் மனிதர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்கள் நம்பியிருப்பார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட காட்டிலே அலைந்து திரிந்த மேய்ப்பர்களுக்கு இந்த நற்செய்தியை முதலாவது அறிவிக்கிறார். அதை அவர்கள் கேட்டு நம்பி, பெத்லகேம் சென்று, இயேசுவை தரிசித்து அந்த நற்செய்தியை அநேகருக்கு அறிவிக்கிறார்கள்.
ஆகவே இயேசுவின் பிறப்பின் நற்செய்தி சிறியவர்கள், பெரியவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், இராஜாக்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மொத்தத்தில் உலகத்தில் உள்ள எல்லா மனிதருக்குமான ஒரு நற்செய்தி, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, ஒரு சில சமுதாய மக்களுக்கோ அல்ல. அனைத்திற்குமான நற்செய்தி ஏனெனில் உலக மக்கள் அனைவரின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிக்கும்படிதான் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார்.
நாமும் இயேசு பிறப்பின் நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள எல்லா ஜனங்களும் அறிந்து கொள்ள ஜெபிப்போம். மேய்ப்பர்கள் போல நம்மால் இயன்றதை முழு பெலத்தோடு செய்வோம். நிச்சயமாய் தேவன் மகிமைப்படுவார். நம் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகட்டும்.
- Mrs. கலைச்செல்வி பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
கிறிஸ்துமஸ் அன்று புல்லலக்கோட்டையில் நடைபெறும் நற்செய்தி பெருவிழாவிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864