Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-06-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 10-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 10-06-2021

 

ஆண்டவர் என் சிநேகிதர் 

 

“நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” – யோவான் 15:14

 

ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு நிலவியது. அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன், எரிச்சலோடும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனைப் பார்த்து, “எப்படிடா இருக்கே?” என்று வழக்கம்போலக் கேட்டான். “சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை, உன்னால் கொடுக்க முடியுமா?” என்று கோபமாக கேட்டுவிட்டு தன் அறைக்குள் சென்றான். அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன், “அரை மணிநேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று நிதானமாகக் கேட்டான். பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏழை நண்பனை ஏளனமாகப் பார்த்தான். அரைமணி நேரத்தில் பணம் வந்தது. பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான், “நீ எப்போது பார்த்தாலும் அதிகமாய் பணத்தைத் தான் சேர்த்தாய் நண்பா, நல்ல நண்பர்களை சேர்க்க மறந்துவிட்டாய். என் உடலுழைப்பினால் உதவிகள் செய்து நண்பர்களை நான் சம்பாதித்துக் கொண்டேன்” என்றான். இருவரும் ஆரத்தழுவி கட்டிக்கொண்டார்கள். உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதியுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஆம், உண்மை பலமும், உயிருள்ள பலமும் நமக்கு நிச்சயம் தேவை. 

 

எனக்கு அருமையானவர்களே! நல்ல நண்பர்கள் நம்மோடு இருப்பது எவ்வளவு நன்மையானது பார்த்தீர்களா? ஆனால் இந்த உலகையே உண்டாக்கிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு நண்பர் ஆவாரானால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலி தானே? இது நடக்குமா? ஆண்டவர் என் சிநேகிதர் ஆக முடியுமா? என்று ஐயம் கொள்ள வேண்டாம். அவர் சொல்வதை நீங்களே கவனியுங்களேன், “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோவான் 15:14) என்று சொல்லுகிறார். எனவே அவர் கற்பித்த கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருக்கு சிநேகிதராகுவோம்! தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தால், நீங்களும் தேவனை உங்கள் நண்பராக்கிக் கொள்ள முடியும். தேவனே நமது நண்பராகிவிட்டால் வாழ்வில் துன்பம் ஏது? எல்லாமே வெற்றிதான்!

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:  

Media ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al