Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.12.2025
Share:

By Village Missionary Movement

Monday, 15-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 15.12.2025

 

இயேசுவின் நாமம்

 

"...அவர் நாமம் அதிசயமானவர்,..." - ஏசாயா 9:6

 

நெப்போலியன் ஹில் 1883 ல் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் பிறந்து, 1970 வரை வாழ்ந்தவர். இவர் தொழில் அதிபராகவும், விசுவாச வீரராகவும் வாழ்ந்தார். பல ஆக்கப்பூர்வமான புத்தகங்களை உலகிற்கு தந்துள்ளார். அவைகளுள் "Think and Grow rich" "Law of success" போன்ற புத்தகங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த புத்தகங்கள் உலகபிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் அநேகரை உயர்த்தியிருக்கிறது. இந்த புத்தகங்களை வேதத்தை மையமாகவே வைத்து எழுதியுள்ளார். கர்த்தரிடமுள்ள விசுவாசமும், அந்த விசுவாச எண்ணமும், அதை அறிக்கை செய்வதுமே நம் வாழ்வின் மையமாக கொண்டிருந்தால் நம் வாழ்க்கை என்றும் ஜெயமே என எழுதியுள்ளார்.

 

 இவருக்கு பிளேர் ஹில் என்ற இரண்டு காதும் கேளாத, காதே சரியாக இல்லாத மகன் பிறந்தார். டாக்டர்கள் கைவிட்ட சூழ்நிலையில், விஞ்ஞான ரீதியாகவும் சாத்தியமற்ற சூழ்நிலையில், இவர் ஆண்டவரை விசுவாசித்தார், ஜெபித்தார். 9 ஆண்டு ஜெபத்திற்கு பின், இவர் மகன் கேட்கும் திறன் பெற்றார். மருத்துவ உலகே வியந்தது, இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. "அவர் நாமம் அதிசயமானவர்". நெப்போலியன் ஹிலின் மகன், அவருடைய வாழ்வில் தேவன் செய்த நன்மைக்கு மகிமை சேர்க்கும் வகையில் காது, மூக்கு, தொண்டை சாதனங்கள் தயாரித்து வழங்கி, பிறருடைய வாழ்வில் நன்மை உண்டாகும்படி அவர் ஆற்றிய பணிகள் இன்றும் கூட சிறப்பாக செயலாற்றி வருகிறது. இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் என்று நெப்போலியன் நிரூபித்து காட்டினார்.

 

இயேசு இவ்வுலகில் இருந்த போது, "இவன் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி இப்படி பிறந்தான்" என்று சொன்னது போல, அநேகர் வியாதியோடு, பல குறைபாடுகளோடு இருப்பதை நாம் காணும் போது, தேவ நாம மகிமைக்காக இவர்களுக்கு இந்த காரியம் கொடுக்கப்பட்டது என்ற எண்ணத்தோடு, அதை நீக்கமுற்பட்டால் நிச்சயம் அந்த குறை நீங்கும். தேவ நாமம் மகிமைப்படும். இந்த கிறிஸ்துமஸ் நன்நாட்களில் அவருக்கென்று பரிசாக நம்மையே அளிப்போம். அவருக்கு மகிமை சேர்க்க அவருடைய கிரியையே செய்வோம். இயேசுவுக்கு இதுவே உகந்ததாகவும் பிரியமாகவும் உள்ளது. யோவான் 4:34 ல் "இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" என்றார். இயேசுவுக்கு உகந்ததையும், பிரியமானதையும் செய்வதே இயேசுவுக்கு நாம் கொடுக்கும் பெரிய பரிசாக உள்ளது. அகிலத்தையும் படைத்தவர் அதிசயமானவராக நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ! ஆமென்.

- Rev.D. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:-

ஓடிசாவில் நம் ஊழியத்தின் சார்பாக இடம் வாங்குவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Online casino nz Best payout online casino nz meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet enbet enbet giriş enbet güncel giriş perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş meritbet meritbet giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet romabet nakitbahis matbet matbet çorlu escort çorlu escort meritking meritking giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş Padişahbet Padişahbet Giriş