Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.12.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 14-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 14.12.2025 (Kids Special)

 

ரீட்டாவும் தாத்தாவும்

 

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” - நீதி. 19:17

 

Hello குட்டீஸ், உங்களுக்கு Bus, Train, Car ல எல்லாம் ஜாலியா Travel பண்ண பிடிக்கும்தானே. லீவு விட்டா போதும் Tour க்கோ அல்லது சொந்தக்காரங்க வீட்டிற்கோ போயிடுவீங்க அப்படித்தானே.

 

உங்களைப் போலத்தான் ரீட்டாவும் தனது அம்மாவைக் கூட்டிக்கொண்டு கிராமத்தில் உள்ள தனது தாத்தா பாட்டி, வீட்டிற்கு சந்தோஷமாக Train ல் சென்றாள். போகும் வழியில் Train ஜன்னல் வழியே இயற்கையை ரசித்துக்கொண்டே சந்தோஷத்துடன் சென்றாள். அது டிசம்பர் மாதமாக இருந்ததால் சுவட்டர் அணிந்து கொண்டு சென்றாள். மறுநாள் காலை தனது தாத்தா பாட்டி ஊருக்கு வந்து, Railway stationல் இறங்கி தனது அம்மாவின் கையை இறுக பிடித்துக்கொண்டு நடந்தாள். பிளாட்பாரத்தில் ஒரு வயதான முதியவர் குளிரில் நடுங்கிக் கொண்டு பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு சிலர் காசு போட்டார்கள். வேறு சிலரோ கண்டும் காணாமல் போனார்கள். ரீட்டாவின் கவனமோ அந்த முதியவர் மீது திரும்பியது. தனது அம்மாவிடம் அம்மா, அந்த தாத்தா பாவம் அவருக்கு ஏதாவது உதவி செய்வோம் என்றாள். அவள் அம்மாவும் அவளிடம் காசுகளை கொடுத்தார்கள். ரீட்டா அதை வாங்கிக் கொண்டு சந்தோஷமாய் அவரிடம் சென்று "தாத்தா இந்தாங்க" என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள். கொஞ்ச தூரம் சென்றவுடன் யாரோ தங்களை பின் தொடர்வதாக உணர்ந்த அவர்கள் திரும்பி பார்த்தார்கள். அந்த முதியவரோ அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். உடனே ரீட்டாவின் அம்மா கோபத்துடன் உங்களுக்கு என்ன வேண்டும் ஏன் எங்களை பின்தொடருகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த முதியவர் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அம்மா இதுவரை என்னை யாருமே தாத்தா என்று கூப்பிட்டதே இல்லை. பிச்சைக்காரன் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உங்களது மகள் என்னை அன்போடு தாத்தா என்று சொன்னது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனக்கென்று யாருமில்லை இன்னொரு முறை என்னை தாத்தா என்று கூப்பிடச் சொல்வீர்களா? என்று சொல்லி அழுதார். உடனே ரீட்டா தாத்தா அழாதீங்க, உங்களுக்கு இயேசப்பா இருக்காங்க, என்று சொல்லி, அவருக்கு நல்ல ட்ரெஸ் வாங்கி கொடுத்து இயேசுவின் அன்பை குறித்து சொல்லி, அவரையும் அவர்கள் தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

 

குட்டீஸ், நீங்களும் கூட Bus stand மற்றும் ரோட்டோரங்களில் யாரும் இல்லாமல்

மனநிலை பாதிக்கப்பட்டவங்கள பார்த்து அற்பமா நினைக்க கூடாது. அவங்கள நேசித்து உன்னால முடிந்த உதவியை அவங்களுக்கு செய்து உதவனும். அதுதான் இயேசப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் o.k வா.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet