By Village Missionary Movement
Saturday, 13-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 13.12.2025
ஆத்துமா
“...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்” - எபிரெயர் 2:4
அமெரிக்காவில் சித்திரம் வரைபவர்களில் மிகவும் பிரபலமான பர்டன் என்பவர் தற்கொலை செய்வதற்கு முன், இந்தச் செய்தியை எழுதி வைத்துப் போனார்.நான் என் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஒரு மனைவியிடமிருந்து மற்றொரு மனைவியிடமும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் ஒடினேன். அப்படி செய்ததினால் என்னுடன் வாழ்ந்தவர்களுக்கு அதிக அளவில் துன்பத்தை ஏற்படுத்தினேன். இதற்கு எல்லாம் காரணம் என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தை கடக்க நான் எடுத்த முயற்சியில் தோல்வியடைந்தமையால் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன் என்று பரிதாபமாக கூறிவிட்டு இறந்தார். அவர் புகழ், ஆஸ்தி, பதவி ஆகியவைகளைப் பெற்றிருந்தும் தன் ஆத்துமாவை காத்துக் கொள்ள தவறியதால் வாழ்வில் தோல்வியடைந்தார். பர்டன் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினவராகவே தன் வாழ்வை முடித்தார்.
வேதத்திலும் சாலொமோன் ராஜாவிடம் கர்த்தர், "ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குப்பின் எழும்புவதுமில்லை" என்றார். தேவன் அவரை அவ்வளவு உயர்வான நிலையில் வைத்திருந்தார். ஆனால் தேவன் சொன்ன கட்டளைக்கு அவர் கீழ்ப்படியவில்லை. தேவன் பலமுறை எச்சரித்தும் அவருக்கு செவி கொடுக்கவில்லை. அதனால் அவரின் முடிவு பரிதாபமாக தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினதாகவே முடிந்தது.
எனக்கு அன்பானவர்களே, தேவன் நமக்கு எவ்வளவு பெரிய இரட்சிப்பை கொடுத்திருக்கிறார். தேவன் நம்மிடம் பலமுறை பாவத்தை குறித்து கண்டித்தும்
கீழ்ப்படிய மனதில்லாமல் இருக்கிறோமா? நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்வு. அதை தேவனுக்காய் வாழ்வோம். நாம் கண்களை மூடும் போது நம் ஆத்துமா பரலோகத்தில் தேவனின் சமுகத்தில் இருக்க வேண்டும் என்பதே நம் வாஞ்சையாய் இருக்கட்டும். நம் ஆத்துமாவின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. அதை இழந்து விடாமல் காத்துக் கொள்வோம்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:-
அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துகிற தன்னார்வலர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864