Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.12.2025
Share:

By Village Missionary Movement

Friday, 12-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 12.12.2025

 

நல்ல மேய்ப்பன்

 

"நானே நல்ல மேய்ப்பன் ;... " - யோவான் 10:11

 

அன்றாட கூலி வேலை செய்து வந்த தாயார், தன் வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று ஜெபிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர்களிடம் ஆலயத்திலிருந்து ஆடு ஒன்றினை பராமரிக்கும்படி கொடுத்தனர். அந்த தாயாரும் அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு அதனை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த ஆட்டிற்கு தண்ணீர் வைப்பது, இலைகளை போடுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்து விட்டு, அந்த தாயாரும் தன்னுடைய வேலைக்குச் சென்று விடுவார்கள். ஒரு நாள் வழக்கம் போல அந்த தாயார் வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும் போது, அவர்கள் வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு காணாமல் போய் விட்டது. அந்த தாயாரும் அழுதுக் கொண்டே ஆட்டை பல இடங்களில் தேடினார்கள். வெகு நேரம் ஆட்டைத்தேடி களைப்புற்ற அவர்கள் அருகிலிருந்த ஆலயத்திற்குச் சென்று ஜெபித்தார்கள். என்ன ஆச்சரியம்! இறுதியில் ஆடே வீட்டை நோக்கி வந்ததைக் கண்டு சந்தோஷப்பட்டனர்.

 

யோவான் 10 ம் அதிகாரத்தில், நல்ல மேய்ப்பன் சம்பவத்தை நாம் வாசிக்கிறோம். ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்தை அறிந்திருக்கும். அதனால் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளை பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்ட பின்பு அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின் செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாமல், அவனை விட்டோடிப்போம்.

 

ஆம், அன்பானவர்களே அந்த மேய்ப்பன் தான் நம்முடைய இயேசு கிறிஸ்து. நாம் தான் அந்த ஆடுகள். பாவத்திலும், சாபத்திலும் வழிதப்பிப்போன நம்மை மீட்டெடுக்க, தன் ஜீவனையே கொடுத்து, அவருடைய இரத்தத்தாலே கழுவி நம்மை மீட்டுக் கொண்டார். நாம் மட்டும் மீட்கப்பட்டால் போதாது. இந்த உலகத்தில் குடி, போதை பழக்கம், ஒரினச் சேர்க்கை என சத்துருவானவன் வாலிபப்பிள்ளைகளை வழி தப்பிப்போக பண்ணுகிறான். ஆண்டவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார். இயேசுவின் அன்பை அறியாத வாலிபப் பிள்ளைகளை பிசாசு சீக்கிரம் அடிமைப்படுத்திவிடுகிறான். அவருடைய இரத்தத்தால் இவர்கள் அனைவரும் மீட்டெடுக்கப்பட, நாம் விழித்திருந்து, ஆத்தும பாரம் உடையவர்களாய் இயேசுவின் அன்பை இந்த உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல பிரயாசப்படுவோம். வழி தப்பி அலைந்து கொண்டிருக்கும் ஆடுகளை ஆண்டவரின் மந்தையில் சேர்ப்போம்.

- J. சிந்து

 

ஜெபக்குறிப்பு:-

அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிற ஒவ்வொருவர் உள்ளங்களிலும் கிறிஸ்து பிறக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet