Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.12.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 10-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 10.12.2025

 

ஜீவனை மீட்ட நிறைவு 

 

“...கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்;... " - ஏசாயா 48:14

 

தன் தோளின் மீது ஒரு சிறுவனை சுமந்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் எண்ணமெல்லாம் எப்படியாவது அந்தச் சிறுவனை காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டுமே. ஒன்றரை கி.மீ சுமந்து ஓடியாகிவிட்டது. இன்னும் ஒன்றரை கி.மீ ஓட வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத ஊர். எங்குச் செல்ல வேண்டுமானாலும் கால்நடையாகவே நடந்து செல்வதில் சற்றும் சளைக்காத கிராமத்தினர். ஓடுகிற அந்த மனிதனைப் பார்த்து, கொடுங்க பிள்ளையை நான் தூக்கிட்டு வாரேன்னு சொன்னவங்களுக்கும் கூட, நின்று பதில் சொல்லாமல் அந்த மனிதன் வியர்க்க விறுவிறுக்க ஓடுகிறார். அண்டை கிராமத்திலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு சளைக்காமல் ஓடி, அந்த சிறுவனை சிகிச்சைக்கு அனுப்பினார். பரிசோதித்த மருத்துவர் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தார். ஒரு மணி நேரம் கழித்து கண்விழித்த சிறுவன், தன்னை காப்பாற்றியவரை மிரள மிரள பார்த்தான். மருத்துவர் அந்த மனிதனை அழைத்து உங்கள் மகன் பிழைத்து விட்டான். மிக சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அவனை கொண்டு வந்துட்டீங்க என்றார். அந்த மனிதன் புன்னகையுடன் ஐயா, அவன் என் பிள்ளை இல்லை. வழியிலே மயங்கி கிடந்தான், தூக்கிட்டு உடனே நடக்க ஆரம்பித்து விட்டேன். எப்படியாவது இவனை காப்பாற்றிடனும்னு ஒரு முடிவோட மனம் தளராமல் வந்துட்டேன் சார் என்றார்.

 

இது சாத்தியமா? தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பிள்ளையை, சாலையில் மயங்கி கிடந்தவனை சுமந்து சென்று, அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றியது நமக்கு வியப்பாக இருக்கிறது அல்லவா? இது ஜீவனை மீட்டெடுத்த உன்னதமான செயல் அல்லவா! தான் மேற் கொண்ட இந்த பணியில், தோளில் சுமந்த சிறுவனோடு ஓட்டமும் நடையுமாக, எங்கும் இளைப்பாறாமல், யாரிடமும் ஒரு வினாடி கூட நின்று பேசாமல்,எந்த ஒரு வாகனத்தையும் எதிர்பார்க்காமல், அவன் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவனை மூன்று கி.மீ சுமந்து, கரடு முரடான பாதையில் சற்றும் தளராமல் சென்றார். அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றி தன் நோக்கத்தில் வெற்றி கண்டார். ஊரல்ல, உறவல்ல, இனமல்ல, அவர் சொந்த ஜனமும் அல்ல. ஒரே சிந்தனை, ஒரே வைராக்கியம், ஒரே செயல் வேகம், பின்வாங்காத வெற்றிப் பயணம் ஜீவனை மீட்ட நிறைவு! 

 

அன்பானவரே, உங்கள் முன் இப்படிப்பட்ட சவால் கொடுக்கப்படுகிறது.

 

நீங்களும் அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்கு, அன்பர் இயேசுவை அறிவிக்கும் பணியில் இதே அர்ப்பணிப்போடு காணப்படுவீர்களா? "யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்துக்கு என்னை அனுப்பும் என்று அர்ப்பணிப்போமா! 

- Mrs. எமீமா சௌந்தரராஜன்

 

ஜெபக்குறிப்பு:

அநேக பகுதிகளில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடத்தப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al