Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.12.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 09-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 09.12.2025

 

நன்மை செய்!

 

"நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” - ரோமர் 12:21

 

நான் புதிதாக வேலைக்குச் சென்ற இடத்தில் என் மீது எந்த விதத்திலும் அதிகாரம் செலுத்த தேவையில்லாத சகோதரி ஒருவர், என் மேல் அநியாயமாய் அதிகாரம் செலுத்தினார். நான் ஆண்டவரிடம் ஜெபித்து, வேதத்தை வாசிக்கும் போது, ரோமர் 12: 21 வசனத்தின் படி, தீமையை நன்மையால் வெல்ல தேவன் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதனால் நான் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வது, பணிவிடை செய்வது போன்றவற்றை செய்தேன். நாளடைவில் தன்னுடைய தவறை உணர்ந்த அவர்கள் என்னை நேசிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மாற தேவன் உதவி செய்தார். ஆண்டவர் கற்றுக்கொடுக்கும் காரியத்தில் எவ்வளவு உண்மை உள்ளது பாருங்கள்!

 

வேதத்தில் 2 இராஜா. 5 ஆம் அதிகாரத்தில், சீரிய தேசத்திற்கு அடிமையாகக் கொண்டுப் போகப்பட்ட சிறு பெண் தேசம், குடும்பம், உறவுகளை இழந்த சூழ்நிலையிலும் தேவன் மேல் மிகுந்த அன்புள்ளவளாயிருந்து, கனி கொடுத்தாள். தன் எஜமானாகிய நாகமானின் குஷ்டரோகம் நீங்க வேண்டும் என்று அவர் மேல் கரிசனை உள்ளவளாயிருந்தாள். அந்த சிறு பெண் சொல்வதைக் கேட்டு அரசாங்கமே நாகமானை இஸ்ரவேலுக்கு அனுப்ப முன் வந்தது. எவ்வளவு பெரிய நற்கிரியைகளை அவள் செய்திருக்கிறாள். நாகமான் சுகம் பெற்றதால் சீரிய தேசத்திற்கு இரட்சிப்பு வந்தது. கர்த்தரே மெய்யான தேவன் என்று ஜனங்கள் அறிந்து கொண்டார்கள். வேதத்தில் பெயர், குடும்பப் பின்னணி எதுவும் சொல்லப்படாத சிறு பெண், ஒரு தேசத்தையே தன்னுடைய நற்கிரியைகளால் ஆண்டவர் பக்கம் திருப்பினாள். குஷ்டரோகம் ஒரு கொடூரமான வியாதி என்றாலும், தேவனுடைய வல்லமையை உணர்ந்தவளாய், வியாதி சுகமாகவில்லை என்றால் தனக்கு தண்டனை கிடைக்குமே, என்ன செய்வது என்ற அச்சமே இல்லாமல் இஸ்ரவேலின் தேவனிடத்தில் பூரண நிச்சயமான விசுவாசத்தை வைத்திருந்தாள்.

 

அன்பானவர்களே! தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்து, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போமானால், நம்முடைய சிறிய கீழ்ப்படிதல், நம் குடும்பம், கிராமம், ஏன் தேசத்தையே கூட அசைக்கும். நன்மை செய்ய, தேவ வார்த்தையின்படி நடக்க, நம் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம். வேதவசனம் நம் இருதயத்தைப் பக்குவப்படுத்தும் எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!

- Sis. எஸ்தர் செல்வி

 

ஜெபக்குறிப்பு:-

அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்க்கு எனது பங்களிப்பைத் தர தீர்மானம் எடுத்தவர்கள் அதை நிறைவேற்ற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş