By Village Missionary Movement
Sunday, 07-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 07.12.2025 (Kids Special)
பேசும் தெய்வம் இயேசு
“உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” - யோவான் 1:9
ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். அதில் ஒரு பையனுக்கு மட்டும் நடக்கவே முடியாது. அம்மாவுக்கு மிகவும் வருத்தமா இருந்தது. வளர வளர பெரிய பையனாக இருந்தான். அவனைத் தூக்க, சாப்பாடு கொடுக்க, இப்படி அவனை சேவிக்க முடியாத அம்மா,ஒரு நாள் அவனை Busல் கூட்டிக்கொண்டு போனாங்க. ஒரு இடத்தில் அவனை இறக்கி உட்கார வைத்துவிட்டு, அந்த அம்மா அவனுக்குத் தெரியாமல் வந்து விட்டார்கள். அம்மா,அம்மா என்று கூப்பிட்டு பார்த்தான், ஒருவரும் உதவி செய்ய வரவில்லை. இரண்டு நாட்களாய் ஒரே இடத்தில் அமர்ந்திருந்த அவனை குப்பைப் பொறுக்கும் ஒரு நபர் பார்த்து அவனிடம் விசாரித்தார். உன் பெற்றோர் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை சேர்த்துக் கொள்வார். வா, நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனை அழைத்துச் சென்றார்.
ஏழ்மை நிலை, குடிசை வீடு ஆனாலும் இரண்டு பேரும் சந்தோஷமாய் இருந்தாங்க.அந்த ஐயா மூலம் இயேசுவின் அன்பை நன்றாக தெரிந்து கொண்டான். அவனுக்கு Bible வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுத்தார். ஒருநாள் திடீரென அந்த ஐயா இறந்துவிட்டார். முடவனான அண்ணனுக்கு அழுகை அடக்க முடியவில்லை. ஓ. வென கத்தி அழுதார்.இயேசுவே, எனக்கென்று இருந்த இவரும் போய்விட்டாரே! என கதறினார். Home வைத்திருந்த ஒருவர் அந்த அண்ணனை அவரோடு கூட அழைத்துச் சென்று அவருக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். இயேசு எனக்கான எல்லாவற்றையும் பார்த்து கொண்டார். நான் அவருக்காக ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஆசைப்பட்டார். அந்த uncle உனக்கு வேறு என்ன வேண்டும் என்று கேட்டாங்க. உடனே எனக்கு பேனாவும், நோட்டும் வேண்டும் என்று சொன்னார். Snacks கேட்பாருன்னு பார்த்தா பேனாவும், நோட்டும் கேட்கிறாரே என்று நினைத்துக் கொண்டே அதையும் வாங்கிக் கொடுத்தார்.
தினம் ஒரு வசனத்தை ஒரு துண்டு பேப்பரில் எழுதி, அதை சுருட்டி கிழே போடுவார். ஒருநாள் அந்த வழியே வந்த நபரின் தலையில் அந்த பேப்பர் விழுந்தது. கோபத்தோடு நானே வாழ்க்கையே வெறுத்துப் போய், வேலை இல்லை, வருமானம் இல்லை, செத்துவிடலாம் என்றுநினைத்தால், யார் இந்த பேப்பரை போட்டது என்று பிரித்து பார்த்ததில் ... கோபமான முகம் மலர்ந்த முகமாய் மாறியது. பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன் என்ற வார்த்தை அவரோடு பேசினது. தன் வழியை மாற்றிக் கொண்டு ஆலயம் சென்றார். அவர் வாழ்க்கை மாறியது.
குட்டீஸ்! இயேசப்பா எவரைக் கொண்டும் ஒரு மனிதனை மீட்டு விடுவார் இந்த கதையில் ஒரு எறியப்பட்ட பேப்பரில் இருந்த ஜீவனுள்ள வசனம் ஒரு மனிதனை மீட்டது. நம் இயேசு உண்மையாகவே பேசும் தெய்வம் தானே.
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864