Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30.11.2025
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Nov-2025

இன்றைய தியானம்(Tamil) 30.11.2025

 

விசாரிக்கும் தேவன்

 

"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" - 1 பேதுரு 5:7

 

எங்கும் குளங்களும், கண்ணை கவரக்கூடிய மிளகாய் மற்றும் பருத்தி தோட்டங்களும் உள்ள கிராமம் தான் இந்த கணேசன் அண்ணனின் கிராமம். இந்த அண்ணனுக்கு அண்ணன், தம்பி, தங்கை எல்லாம் உண்டு. ஆனால் எல்லோரைக் காட்டிலும் இந்த கணேசன் அண்ணன் மட்டும் பயங்கர பக்தி, இந்த அண்ணன் ஊருக்கு யாராவது இயேசப்பா பற்றி சொல்ல போனால், அவர்களை ஊரை விட்டே விரட்டிவிடுவார்.

  

பள்ளி படிப்பை முடித்து college சென்ற கணேசன் அண்ணனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், பெற்றோர்கள் இவரை Hospital அழைத்துச் சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இருதயத்தில் ஒரு பெரிய ஓட்டை இருப்பதாகவும், இவரை எங்களால் காப்பாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்கள். ஒவ்வொரு நாள் இரவிலும் நாம் செத்துவிடுவோமோ என்ற பயம் இவர்களை வாட்டி வதைத்தது. என்னை குணமாக்க இந்த உலகில் யாருமே இல்லையா என்று அழுது புலம்பினார். அந்த நேரத்தில் தான் அவர்கள் கிராமத்திற்கு வந்த ஊழியக்காரர் ஒருவர், இயேசு சுகமாக்குவார் என்று சொன்ன வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஆலயத்திற்குச் சென்று இயேசுவே, எனக்கு உயிர் தாரும் என்று அழுதார். அவர் ஆலயத்திற்கு சென்ற ஓரிரு வாரங்களில் அவர் இருதயத்தில் ஒரு பெரிய மகிழ்ச்சி. தன்னை பரிசோதித்த டாக்டரிடம் போய் மறுபடியும் பரிசோதித்து பார்த்த போது ஓட்டை இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். இயேசு என்னை குணமாக்கிவிட்டார் என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.  

 

சில நாட்கள் ஆனதும் இவருக்குள் ஒரு சந்தேகம். எல்லா கடவுளையும் கும்பிட்டோம், பத்தோடு பதினொன்னா இந்த இயேசு சாமியையும் கும்பிட்டோம். எந்த சாமி நம்மள குணமாக்கினது? இப்படி குழப்பத்தோடு தூங்கி கொண்டிருக்கும் போது அவர் படுத்திருந்த அறை முழுவதும் பயங்கர வெளிச்சம். அழுகிறவராய் இயேசப்பா நின்று கொண்டிருந்தார். இவர் தான் இயேசு என்று தெரியாத அந்த கணேசன் அண்ணன், யார் நீங்க, எதற்கு அழுகுறீங்க என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, "உனக்கு சுகம் கொடுத்த இயேசு நானே" என்றார். உடனே அந்த அண்ணன் அழ ஆரம்பித்தார். இயேசப்பா அவர்களிடம் இன்னும் நிறையபேர் என்னை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னைப் பற்றி சொல்வாயா என்று சொல்லி மறைந்து விட்டார். அன்றிலிருந்து தனக்கு உயிர் கொடுத்த இயேசுவை ஊர் ஊராக சொல்ல ஆரம்பித்தார். கணேசன் அண்ணன் மூலம் உருவானது தான் இந்த கிராம மிஷனெரி இயக்கம்.

 

அன்பு தம்பி, தங்கச்சி! அந்த கணேசன் அண்ணனுக்கு உயிர் கொடுத்த இயேசப்பா இன்று உன்னையும் தேடி வந்திருக்கிறார். உன்னுடைய பிரச்சனை எதுவாக இருந்தாலும் அந்த இயேசுவிடம் சொல், இயேசு உனக்கும் அற்புதம் செய்வார்.

- Mrs .சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al