Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-06-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 08-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 08-06-2021

 

உன்னிடமிருப்பதை பயன்படுத்து

 

“…கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,...” – மத்தேயு 25:21

 

ஒரு நாட்டின் மன்னருக்கு ஒரு ஆசை வந்தது. அண்டை நாட்டிலுள்ள அரசர்களையும், அரசவையினரையும் அழைப்பித்து சிறந்த தேநீர் விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டுமென்று! விருந்து மிக நேர்த்தியாக இருக்க வேண்டுமென்றும், விசேஷமாக தான் அளிக்கக்கூடிய தேநீரின் சுவையைப் பற்றி விருந்தினர் தன் நாட்டிற்குச் சென்ற பின்பும் மெய்சிலிர்த்து பேசக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். தன் அரண்மனையில் உள்ள தேநீரின் சுவையும், மணமும் சற்று குறைவாக இருப்பதை எண்ணி, நாட்டிலேயே சிறந்த தேயிலையையும், சிறப்பாக தேநீர் தயாரிப்பவர்களையும் கண்டுபிடிக்கும்படி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அவரும் மாறுவேடத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு தன் படைவீரர்களுடன் கிளம்பினார். எதிலும் திருப்தி ஏற்படாததால் மிகவும் சோர்வுடன் ஒரு மலைக்கிராமத்தில் இளைஞன் ஒருவனின் சிறிய டீக்கடையைக் கண்டு தேநீர் அருந்துவதற்காக சென்றார். 

 

அந்த இளைஞனோ தன்னைத் தேடி வந்தது அரசவையில் உள்ளவர்கள் என அறிந்து கொண்டான். ஆனால் தன்னிடம் போதுமான அளவு தேயிலை இல்லாததினால் திகைத்தான். இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டால் தன் வாழ்க்கை சிறப்பாக இருக்குமென்று உணர்ந்தவனாய், தன் தோட்டத்திற்குச் சென்று சில பொருட்களை எடுத்து வந்து தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தான். அதன் சுவையும், மணமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று மன்னர் மகிழ்ந்து, அவனிடம் கேட்டதற்கு தன்னிடம் சிறிதளவே தேயிலை இருந்ததாகவும் தன் தோட்டத்திற்குச் சென்று சில ரோஜா இதழ்களையும், ஆரஞ்சு பழத்தோல்களையும் பறித்துக்கொண்டு வந்து சரியான விதத்தில் சேர்த்து தயாரித்ததாக சொன்னான். தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை, தன்னிடமிருப்பதைக் கொண்டு சரியாக பயன்படுத்தினதால் அன்றைய விருந்தில் மட்டுமல்ல, அரண்மனையிலும் அவனுக்கு வேலை கிடைத்தது. 

 

வேதாகமத்திலே, ஐந்து தாலந்தை பெற்றவனும், இரண்டு தாலந்தை பெற்றவனும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளை பயன்படுத்தி பலனையும் பெற்றனர். ஆனால் ஒரு தாலந்தைப் பெற்றவனோ தன்னிடம் இல்லாததைக் குறித்து எண்ணி, இருப்பதையும் அலட்சியப்படுத்தி பயன்படுத்தாமல் போனான். 

 

அன்பானவர்களே! நாமும் கூட அநேக வேளைகளில் கர்த்தர் நமக்கு கொடுத்த குடும்பம், பணம், பதவி, அந்தஸ்து, திறமை. தாலந்துகள் இவைகளைக் குறித்து சந்தோஷப்பட்டு திருப்தியடையாமலும், அவைகளைக் கர்த்தருக்கென்று பயன்படுத்தாமலும் குறைவுகளையே எண்ணி கலங்கிக் கொண்டிருக்கிறோம். சிலர் கர்த்தர் எனக்கு இந்த நன்மையைச் செய்தால் கர்த்தருக்கு இவ்வளவு கொடுப்பேன் என்றும், கர்த்தருக்காக காரியங்களைச் செய்வேன் என்றும் கர்த்தரிடம் பேரம் பேசுகின்றனர். அப்படியல்ல நம்மிடம் கர்த்தர் கொடுத்த கொஞ்சத்தில் உண்மையாய் இருந்து அவைகளைக் கர்த்தருக்கென்று பயன்படுத்தும்போது நிச்சயமாய் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

- Mrs. வசந்தி ராஜமோகன்

 

ஜெபக்குறிப்பு:  

நமது மோட்சப் பயணம் தின தியான செய்திகள் 8 மொழிகளில் வெளியிடுவதற்கு உதவிசெய்து வரும் மொழிபெயர்ப்பாளர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş