Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.11.2025
Share:

By Village Missionary Movement

Monday, 03-Nov-2025

இன்றைய தியானம்(Tamil) 04.11.2025

 

கூக்குரலைக் கேட்டார் 

 

"...யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்;..." - 2 நாளா. 18:31

 

ஆண்டவரை அறியாத புறமார்க்கத்தில் பிறந்த நான், பத்தாம் வகுப்பு படிக்கும் போது இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். அதனால் பல இடங்களில், அதுவும் சொந்த குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டேன். இருப்பினும் ஆண்டவரையோ, அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தையோ விட்டு விடவில்லை. வேதாகம கல்லூரியில் சேர்ந்து வேதத்தை கற்றுக்கொள்ள தேவன் உதவிச் செய்தார். ஊழியத்தை தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் நிறைவேற்றிட தேவன் அநுக்கிரகம் செய்தார். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, ஊழியப் பாதையிலும் சரி நான் எப்போதெல்லாம் ஆண்டவரை நோக்கி கூக்குரல் இட்டேனோ, அப்போதெல்லாம் தேவன் எனக்கு அனுகூலமாக இருந்தார்.  

 

வேதத்திலே, தேவனை நோக்கி கூக்குரலிட்ட ஒரு இராஜாவைக் குறித்து இன்று காண்போம். இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜ வஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, வேஷமாறி யுத்தத்திலே பிரவேசித்தார். யுத்தத்தில் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம் பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; யோசபாத்தின் கூக்குரலை கேட்டு, அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார். இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள். வேதத்தில் நாம் வாசித்த இந்த பகுதியில், யோசபாத்தை இஸ்ரவேலின் ராஜா, ராஜ தந்திரம் செய்து போரில் கொல்ல திட்டமிட்டான். ஆனால் யோசபாத் ஆண்டவரிடத்தில் கூக்குரல் இட்டதால் ஆண்டவர் உடனே அவனை போரில் தப்புவித்தார். யாத். 3:7 ல், எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,... அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன் என்று கர்த்தர் மோசேயிடம் சொல்கிறார்.   

 

இதை வாசிக்கிற தேவபிள்ளையே, நாமும் பல வேளைகளில் பிசாசின் தந்திரங்களில் சிக்கிக் கொள்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் வரும் போது, நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ நம்பி அவர்களிடம் கூக்குரல் இடுகிறோம். ஆண்டவர் உங்கள் கூக்குரலை கேட்கிறார். நீங்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன் என்கிறார். நமது ஆண்டவர் அவர் பிள்ளைகள் அழுது கொண்டிருப்பதை விரும்புவதில்லை. ஆண்டவரின் பிள்ளைகள் வேதனைப்படுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். நாம் எப்போதெல்லாம் அவரை நோக்கி கூக்குரல் இடுகிறோமோ, அப்போதெல்லாம் நம்முடைய கூக்குரலை கேட்கிறார். நீங்களும் அவரை நோக்கி கூப்பிடுவீர்களா?

- Rev.ஜோதிநாயகம்

 

ஜெபக்குறிப்பு:-

தெபோரள்கள் செய்யும் ஊழியங்களில் கர்த்தர் மகிமைப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Online casino nz Best payout online casino nz meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet enbet enbet giriş enbet güncel giriş perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş meritbet meritbet giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet romabet nakitbahis matbet matbet çorlu escort çorlu escort meritking meritking giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş Padişahbet Padişahbet Giriş