Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.11.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 01-Nov-2025

இன்றைய தியானம்(Tamil) 01.11.2025

 

அடங்கியிருக்க வேண்டும்

 

"அவர் (தேவன்) உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" - 1 பேதுரு 5:7

     

விவசாயி ஒருவன் சாக்கு மூட்டை ஒன்றில் தானியங்களை களஞ்சியத்திற்கு எடுத்துச் சென்றான். சாக்கிற்குள் புழுக்கமாகயிருந்ததால் தானியங்கள் அழுதுகொண்டிருந்தன. சாக்கில் இருந்து ஓட்டை வழியாக தப்பித்துக் கொள்வோம் என்று தீர்மானித்து சில தானியங்கள் ரோட்டில் விழுந்தன. சிறிது நேரத்தில் குருவிகளும், எலிகளும் அவைகளை தின்று போட்டது. களஞ்சியத்தில் மூட்டைகளை வைத்த போது இன்னும் சில தானியங்கள் நழுவி தரையில் விழுந்தன. அவைகளுக்கு இப்பொழுது மூச்சு விட முடிந்தது. ஆனால் ஒரு பணிப்பெண் வந்து அவைகள் அனைத்தையும் கூட்டி சாக்கடையில் போட்டாள்.  

 

மீதி தானியங்களுக்கும் நெருக்கடியில் மூச்சுமுட்டியது. எவ்வளவு நாள் இந்த நிலை நீடிக்கும் என்றே தெரியாது. அவைகள் கண்ணீர் வடித்துக் கொண்டேயிருந்தன. ஒரு நாள் விவசாயி வந்து தானிய சாக்கை திறந்து, தானியங்களை வயலில் கொண்டு போய் விதைத்தான். தரை அருமையாகயிருந்தது, காற்று ஜில்லென வீசியது. உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கிடைத்தது. அவைகள் வளர்ந்து ஏராளமான விளைச்சலை கொடுத்தன. மகிழ்ச்சியாக, பெருமையாக காற்றில் அசைந்தாடின.

 

இயேசுவின் கரத்துக்கடியில் இருப்பது சுலபமல்ல. வேதனைகளையும், கடினமான நேரங்களையும் சகிக்கத்தான் வேண்டும். தப்ப நினைப்போமானால், ஆபத்தான முடிவை சந்திப்போம். ஆனால் இயேசுவுடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருப்போமானால் ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார். ஆகவே ஏற்ற காலத்திற்காக பொறுமையோடே காத்திருங்கள். வசனம் சொல்கிறது சங். 27:14 "கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திட மனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு."

 

நம்முடைய வாழ்க்கையில் பாடுகள், உபத்திரவங்கள் மாறி, மாறி வந்து கொண்டேதான் இருக்கும். அது எப்படியென்றால், எப்படி கோடை காலம், மழைகாலம் என்று காலநிலைகள் மாறுகிறதோ அப்படித்தான் நம் விருப்பப்படி நம் வாழ்வில் எல்லாம் நடக்காது. ஆனால் இயேசுவின் கரத்திற்குள் அடங்கியிருப்போமானால் நன்மைகளை நாம் சுதந்தரிப்பது நிச்சயம். இதை யோபு என்ற பக்தர் சொல்லும் போது, யோபு 36:11,12 ல் "அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷநாட்களைச் செல்வ வாழ்வாகவும் போக்குவார்கள்".

 

எப்படி சில தானியங்கள் எப்படியாகிலும் தப்பித்துக் கொள்வோம் என்று ரோட்டிலும், வீட்டிலும் விழுந்ததோ அவைகள் மாண்டுபோயின. ஆனால் பொறுமையோடு சாக்கிற்குள் அடங்கியிருந்த தானியங்கள் தான் கெம்பீரமாக தங்கள் நாட்களை அனுபவித்தது. இயேசுவுக்காக கஷ்டங்களையும், நஷ்டங்களையும், பொறுத்துக்கொள்ள இன்றே நாம் தீர்மானிப்போம். ஏற்றகாலம் வரும் போது இயேசு நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். ஆமென்! அல்லேலூயா! கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக! 

- Rev. S.A.. இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:-

ஒவ்வொரு மாநிலத்திலும் 500 மிஷனெரிகளை உருவாக்க

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al