By Village Missionary Movement
Sunday, 26-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 26.10.2025
ஓட்ட சைக்கிளும் ஓனரும்
"...தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" - ரோமர் 8:28
"கிளிக்"... "கிளிக்"... என்ற பயங்கர சத்தம் கேட்டதும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் எல்லாரும் சிரிக்க, பாலுவுக்கோ பயங்கர கோபம் வந்தது. தனது அப்பாவை பார்த்து அப்பா, இந்த சைக்கிளை மாத்தவே மாட்டீங்களா? மானம் போகுதுன்னு திட்டினான். யார் அந்த பாலு? என்ன நடந்தது? என்று தானே நினைக்கிறீங்க குட்டீஸ்! வாங்க கதைக்குள்ள போவோம்.
எட்டாம் வகுப்பு படிக்கும் பாலு தனது பெற்றோர்களுடன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தான். பாலுவின் அப்பா பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். அந்த சைக்கிள் மிகவும் பழையது. அதில் மாட்டியிருந்த bell அதைவிட மோசமாக இருக்கும். Bell ஐ அழுத்தினால் ஊருக்கே சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்டதும் எல்லோரும் சிரிப்பார்கள். பாலு அப்பாவிடம், அப்பா please ஒரு நல்ல சைக்கிள் வாங்குங்கள் என்றான். அப்பாவோ இப்பொழுது சைக்கிள் வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் இயேசப்பா நிச்சயம் தருவாங்க என்றார்.
மறுநாள் காலை பாலுவின் அப்பா வியாபாரத்திற்கு போகின்ற வழியில் உள்ள ஆலயத்திற்குச் சென்று இயேசப்பா, இன்று எனக்கு நூறு ரூபாய்க்கு வியாபாரம் ஆகணும். அப்படி ஆனால் பத்து ரூபாய் தசமபாகம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். வந்து பார்த்தால் சைக்கிளை காணவில்லை. அப்பாவிற்கோ பேரதிர்ச்சி. வருமானத்திற்கு இருந்த அந்த ஒரு சைக்கிளும் இப்படி காணாமல் போய்விட்டதே, இயேசப்பா நான் ஜெபிக்க தானே போனேன். இப்படி ஆயிட்டே என்று குழம்பியவாறே வீட்டிற்கு சென்றார். மனைவி, அவரிடம் எங்க உங்க சைக்கிள்? என்று கேட்க, அவர் நடந்த எல்லாவற்றையும் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து கடைத்தெருவில் நடந்து சென்ற போது அவரது சைக்கிள் bell சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் அவரது சைக்கிளை திருடன் ஒருவன் ஒட்டிக்கொண்டு வந்தான். அவர் அவனை வழிமறித்து, இது என்னுடைய சைக்கிள் என்றார். அவனோ அதை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. போலீஸ், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தார். ஒரு போலீஸ் நாங்கள் இந்த திருடனை ரொம்ப நாளாக தேடி வந்தோம். இப்பொழுது உங்கள் மூலம் அவன் பிடிப்பட்டு விட்டான். அதற்காக உங்களுக்கு ஒரு சிறப்பு பரிசு தருகிறோம் என்று சொல்லி, 5000 ரூபாயை கொடுத்தார்கள். அதை அவர் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டு நேரே ஆலயத்திற்குச் சென்று, 500 ரூபாய் தசமபாகம் செலுத்திவிட்டு ஒரு புது சைக்கிளும் வாங்கி இயேசப்பாவிற்கு நன்றி கூறினார்.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864