Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.10.2025
Share:

By Village Missionary Movement

Sunday, 19-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 19.10.2025

 

தாலந்துகளை பயன்படுத்து

 

"...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” - 2 கொரிந்தியர் 9:7

 

சார்லட் எலியட் ரொம்ப அழகான பெண். பியானோ வாசிப்பதில் திறமை வாய்ந்தவர். அவர் வாசிப்பதைக் கேட்டால் அவ்வளவு இனிமையாக இருக்கும். இன்னும் பயிற்சி எடுத்து பியானோ வாசிப்பதில் தேறினவராய் மாறினார். சின்ன சின்ன கூட்டங்களில் பியானோ வாசித்துக் கொண்டிருந்த எலியட், ரொம்ப Famous ஆகிவிட்டார். ஆகவே பெரிய பெரிய கூட்டங்களில் வாசிக்க அழைக்கப்பட்டார். வழக்கத்திற்கு மாறாக அன்று பாராட்டு மழை குவிந்தது. அந்த நேரத்தில் டாக்டர் மிலன் அவர்கள் அங்கு வந்தார். எலியட், உனக்கிருக்கும் அழகும், தாலந்தும் தேவன் உனக்கு தந்தது. அதை அவருக்காக பயன்படுத்து. முதலாவது அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள் என்றார். அது மட்டுமல்ல தேவன் தந்த தாலந்துகளை உலக காரியத்திற்காக பயன்படுத்தி பணம், பெயர், புகழை சம்பாதிப்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்றார்.

 

இந்த வார்த்தைகள் சார்லட் எலியட்டின் காதுகளில் தொனித்துக் கொண்டே இருந்தது. அது அவரை சிந்திக்க வைத்தது. நேரத்தையும் காலத்தையும் இப்படி வீணாக்கி விட்டோமே தேவன் தந்த தாலந்தை அவருக்காக பயன்படுத்தினால் அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என நினைத்து அன்று முதல் தன் தாலந்துகளை ஆண்டவருக்காக பயன்படுத்த ஆரம்பித்தார். மேலும் அநேக பாடல்களை எழுதினார். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் பாடப்படும் பாடல். அது என்ன பாட்டாக இருக்கும்ன்னு தானே நினைக்கிறீங்க குட்டீஸ்.

  "நான் பாவி தான் ஆனாலும் நீர்

  மாசற்ற இரத்தம் சிந்தினீர்" என்ற பாடல் தான்.   

 

இதை எழுதும் போது, தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உணர்ந்தார். தேவன் தந்த தாலந்துகளை அவருக்காக பயன்படுத்துவதை எண்ணி சந்தோஷப்பட்டார். தேவன் அவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றினார்.

 

குட்டி கண்மணி பிள்ளைகளே, நீங்கள் நன்றாக பாடலாம், வரையலாம், எழுதலாம். உங்களுக்குள் இருக்கிற தாலந்துகள் எதுவாக இருந்தாலும் அதை ஆண்டவருக்காக பயன்படுத்தும் பொழுது Jesus சந்தோஷப்படுவார். அதற்காகத்தானே நம்மை படைத்திருக்கிறார் குட்டீஸ்! என்ன யோசிக்கிறீங்க, என் தாலந்துகள் அனைத்தையும் இயேசுவுக்கே பயன்படுத்துவேன் என்று தீர்மானம் எடுப்பீர்களா? அதை இன்றைக்கே இப்பொழுதே செய்வீர்களா?very good super.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al