Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.10.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 18-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 18.10.2025

 

பிரயோஜனமுள்ளவன் 

 

"முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன். இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்” - பிலேமோன் 1:11

 

அமெரிக்காவிலே ஜான் என்ற ஒரு சிறுவன் தன் குடும்பத்தால், உறவினர்களால் ஒதுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்தான். அவன் தெரு ஓரங்களில் கிடக்கிற இரும்பு துண்டுகளை பொறுக்கி அதை இரும்பு பட்டறைக்கு கொண்டு போய், அதை கூர்மையாக்கி கத்தியாக செய்தான். முதல் தடவை இரண்டு கத்திகளை செய்து அதை ஒரு வீட்டில் குறைந்த விலைக்கு விற்றான். அந்த வீட்டு அம்மா இந்த கத்தி நன்றாக இருக்கிறது நீ இன்னும் நிறைய கத்திகளை செய்யலாமே என்று கூறினார்கள். அவனும் அதை ஒரு நல்ல ஆலோசனையாக ஏற்றுக் கொண்டு கடினமாய் உழைத்து அனேக கத்திகளைச் செய்தான். காலப்போக்கில் இரும்பை விலை கொடுத்து வாங்கி தரமான கத்திகளை செய்து ஒரு கடை வைத்து, அந்த கடைக்கு "John knife" என்று பெயரிட்டான். வியாபாரம் அமோகமாக நடைபெறவே வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானத்திற்கு வந்தான். அவன் குடும்பத்தினரும் அவனோடு வந்து சேர்ந்து கொண்டார்கள்.   

 

ஆதியாகமத்தில் யோசேப்பு என்ற ஒரு வாலிபனைக் குறித்து பார்க்கிறோம். அவனுடைய சகோதரர்கள் அவனை வெகுவாய் வெறுத்தனர். அவனை கொன்று விட எண்ணி ஒரு குழியிலே போட்டனர். பின்பு அவனை அடிமையாக அந்நிய தேசத்தானுக்கு விற்று போட்டனர். யோசேப்பு எல்லா வகையிலும் மிகவும் நெருக்கப்பட்டான். இருப்பினும் கர்த்தர் அவனோடு இருந்ததால் அவன் செய்த எல்லா காரியத்தையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணினார். அவன் காரியசித்தி உள்ளவனாய் இருந்தான். பின்பு செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கும் தலைவனாய் உயர்த்தப்பட்டான். பின் எகிப்திற்கு அதிபதியாக்கப்பட்டார். எகிப்திலே உயர்த்தப்பட்ட யோசேப்பை தேடி அவன் சகோதரர்கள் வரும்படியான சூழ்நிலை. அதாவது எல்லா இடங்களிலும் உண்டான பஞ்சமே காரணம். சகோதரரை மன்னித்து சேர்த்துக்கொண்ட யோசேப்பு ஆசீர்வதிக்கப்பட்டார்.

 

பிரியமானவர்களே! நீங்களும் உங்கள் குடும்பத்தாரால், உறவினரால் பிரயோஜனம் இல்லாதவர்களாய் எண்ணப்படுகிறீர்களோ? எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவருடைய கரத்தினால் ஆகும். இந்த வசனத்தின்படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். மேலே குறிப்பிட்ட வசனத்தில் பிலேமோன் என்ற எஜமானுக்கு இருந்த அடிமை ஒநேசிமு குற்றம் புரிந்ததால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அங்கு அப்போஸ்தலனாகிய பவுலை கண்டு ஆண்டவருடைய வார்த்தையை பெற்று மீண்டும் அவனுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறான். ஆம், உலகத்தால் பிரயோஜனமற்றவர்களாக பார்க்கப்படும் நம்மை பிரயோஜனமுள்ளவர்களாய் மாற்றுவது தேவனுக்கு எளிதான காரியம். உங்களை அவமதித்து துரத்தி விட்டவர்கள் மத்தியில் மீண்டும் உங்களை தூக்கி உயர்த்த தேவனால் கூடும் என்று விசுவாசியுங்கள்.

- B.சுபாஷ்

 

ஜெபக்குறிப்பு:-

நான்கு சுவிசேஷ லாரிகள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al