Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.10.2025
Share:

By Village Missionary Movement

Friday, 17-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 17.10.2025

 

ஜெபத்தின் வல்லமை

 

"...நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்" - நீதி.15:29

 

வில்லியம் கிரிம்ஷா இங்கிலாந்து நாட்டில் பிறந்து, ஒரு சபையில் குருவானவராகவும் மற்றும் பல சபைகளிலும் ஊழியம் செய்தவர். இவர் வாழ்ந்த பட்டணத்தில் ஆண்டுதோறும் ஒரு குதிரை பந்தயம் குறிப்பிட்ட சில நாட்களுக்கு நடக்கும். அந்த சமயத்தில் மது அருந்துதல், விபச்சாரம், வேசித்தனம் போன்ற காரியங்கள் அதிகமாக நடக்கும். இவர் இந்த ஒழுக்கக் கேடான காரியங்களை கண்டு அதிக வேதனைப்படுவார். சில நேரங்களில் அந்த இடத்தில் சண்டைகளும் நடைபெறும். இதில் ஈடுபடுபவர்களுள் கிறிஸ்தவர்கள், சபையிலுள்ள பெரும் செல்வந்தர்களும் அடங்குவர். அங்கு சென்று இது தவறு என கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர் இந்த பந்தயம் நடைபெற கூடாதென்று ஒவ்வொரு நாளும் ஜெபிக்க ஆரம்பித்தார். அடுத்த ஆண்டு குதிரை பந்தயம் நடைபெறவில்லை, ஏனென்றால் பந்தயம் நடைபெற போகிற நாட்களில் ஒரு வாரம் பலத்த மழை கொட்டியதின் காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டது. அதுபோன்ற நிகழ்ச்சிகள் பின்பு நடைபெறவில்லை. தன் ஜெபத்தினால் அந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுத்துவிட்டார். அங்கு ஜெபத்தின் வல்லமை வெளிப்பட்டது.

 

அப். 10 ஆம் அதிகாரத்தில் கொர்நேலியு என்ற நூற்றுக்கு அதிபதி ஜெபிக்கிற, தேவபக்தியுள்ள மனிதர். இவர் தேவனை ஏற்றுக் கொண்டவர், இரட்சிக்கப்பட்டவர். ஆனால் தன் நண்பர்கள், உறவினர்கள் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும், பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும், இரட்சிக்கப்பட வேண்டும் என எண்ணி அவர்களுக்காக ஜெபித்தார். கொர்நேலியுவின் ஜெபத்தைக் கேட்டு, தேவன் பேதுருவை தரிசனத்தில் காட்டி அழைக்கச் சொன்னார். பேதுரு வந்து பிரசங்கித்த போது அநேகர் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை பேசி இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். நிச்சயம் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் உண்டாயிருக்கும்.

 

பிரியமானவர்களே! நீங்களும் உங்கள் நண்பர்களுக்காக உறவினர்களுக்காக ஜெபிக்கலாமே! பாவத்தில் வாழ்ந்து நரகத்திற்குச் செல்வோரை உங்கள் ஜெபத்தினால் தடுக்கலாமே! மேலும் நாம் மதுவிலக்கிற்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும், தேசங்களுக்காகவும் வல்லமையாய் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி நாம் ஜெபிப்பதற்கு முதலாவது நமக்கு மனதுருக்கம் தேவை. கொர்நேலியுவைப் போல நமக்கும் மனதுருக்கம் இருக்கிறதா என சற்று சிந்திப்போம். இயேசுவானவரின் மனதுருக்கமே அவரது ஊழிய வெற்றிக்கு காரணமாயிருந்தது. நாமும் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்தவர்களாய் மனதுருக்கத்தோடு ஊக்கமாய் ஜெபிப்போம். ஜெபத்திற்கான பதிலைக் காண்போம்.

- Mrs.ஜோதி ஆனந்த்

 

ஜெபக்குறிப்பு:-

50,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க தேவையான 2 வீலர், 4 வீலர் வாங்குவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al