Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.10.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 14-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 14.10.2025

 

கர்த்தருக்கென்றே எதையும் செய்வோம் 

 

"அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான்..." - அப். 9:6

 

பவுல் அப்போஸ்தலனுக்கு உண்டான தரிசனம் போல், இந்தியாவில் பிறந்து தனது கொள்கையில் சவுலைப் போல் இருந்து, 'இந்தியாவின் அப்போஸ்தலன்' என பெயர் பெற்றவர் சாது சுந்தர்சிங் ஆவார்.

 

இவருடைய வாழ்க்கைப் பயணம் வேதாகமத்திலுள்ள பக்தர்களுக்கு சமமாக தோன்றும். பாழும் கிணற்றில் போடப்பட்ட எரேமியாவின் அனுபவம் இவருக்கும் உண்டு. ஒரு முறை சாது சுந்தர் சிங் திபெத் நாட்டில் சுவிசேஷத்தை அறிவிக்க சென்ற போது அவரை பிடித்து ஆழ்கிணற்றில் போட்டு விட்டார்கள். அங்கு பலருடைய எலும்புக் கூடுகள், அழுகிய பிணங்களின் துர்நாற்றம் இவைகளின் மத்தியில் இருந்து கொண்டு மூன்று நாட்கள் ஜெபித்தார். ஒரு நபர் இவரை கயிற்றின் வழியாக வெளியே தூக்கிவிட்டு மறைந்தார். பவுல் அப்போஸ்தலனைப் போல் ஆவியானவரால் நடத்தப்பட்ட அனுபவமும், பிலிப்புவை பரிசுத்த ஆவியானவர் கொண்டு செல்லப்பட்ட அனுபவமும் சாது சுந்தர்சிங்கிற்கு உண்டு. இவருடைய பணியையும், போதனைகளையும், அனுபவத்தையும் கண்ட ஆயிரக்கணக்கான பேர் தங்களை தேவபணிக்கென்று மிஷனெரிகளாக அர்ப்பணித்தனர். அவர் அர்ப்பணித்ததைப் போல் இன்று நாமும் நம்மை அர்ப்பணிப்போம், மற்றவர்களையும் ஆத்தும அறுவடை பணிக்கென்று அழைத்து வருவோம்.

 

திபெத், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஊழியம் செய்த இவர் மிகவும் எளிமையானவர், இனிமையானவர், வேதத்திலுள்ளவைகளை உவமைகளைக் கொண்டு போதிப்பதில் சிறந்தவர். இவர் எழுதிய நூல்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஊன்று கோல்களாக திகழ்கின்றன. 'இரத்தம் சிந்தும் பாதங்களை உடைய அப்போஸ்தலன்' என்று அழைக்கப்பட்ட இவரைப் போல் இன்னும் பலர் எழும்ப ஜெபிப்போம். இரத்த சாட்சிகளாய் மரிக்க, ஆண்டவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்க இவருடைய வாழ்க்கை நம்மை உற்சாகப்படுத்துகிறது. அநேக காரியங்களுக்காக ஜெபிக்கிற நாம், இயேசு விரும்பும் இந்த ஜெபத்தையும் ஏறெடுப்போம்.

 

"அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்."( மத். 9:38)

 

"எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" (கொலோ. 3:24). இன்றைய பிரதான பணியாக கர்த்தருடைய சுவிசேஷப்பணி உள்ளது. இதை செய்ய திரளான விசுவாசிகள் எழும்பி வர ஜெபிக்க வேண்டும். இதன் தேவைகள் சந்திக்கப்பட, கொடுக்கிற மக்களை தேவன் எழுப்பித் தர நாம் ஜெபிப்போம். தேவன் தாமே அவருடைய உன்னதப் பணியில் நம் அனைவரையும் பயன்படுத்துவாராக. ஆமென்.

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:-

அஸ்திபாரம் போடப்பட்டு 52 நாட்களில் மிஷனெரி பயிற்சி கட்டடத்தின் முதல் தளம் கட்டி முடிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al