Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.10.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 12-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 12.10.2025 (Kids Special)

 

POWER ரான வார்த்தை

 

"நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக் கொள்ளுவேன்" - சங்கீதம் 119:44

 

ஹலோ குட்டிச் செல்லங்களே! How are you? ஒவ்வொரு வாரமும் கதை கேட்கிறீங்கள்ல... கேட்பது மட்டுமல்ல அதன்படி வாழ முயற்சி செய்து கொண்டே இருக்கணும் o.k வா குட்டீஸ்.

 

இங்கிலாந்து தேசத்தில் ஒரு விவசாயிக்கு குதிரைகள் இருந்தது. அவைகளுக்கு 'பட்டீ' என்றும், 'கேஸி' என்றும், 'பெய்லி' என்றும் பெயர் வைத்திருந்தார். உங்களுக்கும் அம்மூ, பட்டு என்று செல்லமா பெயர் வைப்பாங்கதானே அது போல தான். மாலை நேரத்தில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. வெகுதூரத்திலிருந்து ஒருவர் பதற்றத்துடன் ஓடி வந்தார். விவசாயி அவரை உட்கார வைத்து சூடாக டீ கொண்டு வந்து கொடுத்தார். சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க. ரொம்ப படபடப்பா இருக்கீங்களேன்னு கேட்டார்.

 

நான் லண்டனிலிருந்து வரும் வழியில் ஒரு சின்ன பள்ளத்தில் என் கார் விழுந்து விட்டது. உங்களிடம் குதிரை இருப்பதாக கேள்விப்பட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனே வேக வேகமாக கயிறு மற்றும் தேவையான உபகரணங்களை எடுத்து கொண்டு சென்றார்கள். உதவி செய்வதற்கு எவ்வளவு துரிதமாய் போனார் பார்த்தீங்களா குட்டீஸ். நீங்களும் இப்படித்தான் மற்றவர்களுக்கு உதவி செய்யணும். விவசாயி காரை கயிற்றால் நன்றாகக் கட்டி மறுமுனையில் குதிரையை கட்டினார். பின்பு கேஸி வேகமாக இழு என்றார். பெய்லி ம்...ம் நீயும் speed ஆக ம்...ம்... என்று சத்தமாக சொன்னார். பட்டீ என் செல்லமே நீயும் இழுத்து விடு பார்க்கலாம் என்று சொன்னதும் கார் மேலே வந்து விட்டது. கார் ஓட்டுநருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு குதிரைதானே இருக்கிறது மூன்று பெயரை சொன்னீங்களே என்று கேட்டார். என்னுடைய பட்டீக்கு கண் தெரியாது பக்கத்தில் இரண்டு குதிரைகள் இருப்பதாகச் சொல்லி அதற்குள் தைரியத்தை வர வழைத்தேன் என்று சொன்னார். நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி என்று சொன்னார். பின்பு பட்டீயை தட்டிக் கொடுத்து விட்டு very good உன் எஜமானுக்கு பிரயோஜனமான குதிரையாக இருக்கின்றாயே! என்று சொன்னதும் குதிரை எல்லாம் புரிந்ததைப் போல் தலையை அசைத்தது.   

 

குட்டிச் செல்லங்களே, எஜமான் சொன்னதை கேட்டு கீழ்ப்படிந்த குதிரைக்கு நம்பிக்கையும், பெலனும் கிடைத்தது போல வேத வசனத்திற்கு பல மடங்கு power இருக்கிறது. அதை வாசித்து, தியானித்து, நேசித்து அதன்படி வாழ்ந்தால் உன் life ரொம்ப Bright ஆக மாறும்.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al