Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.10.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 11-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 11.10.2025

 

பிலாத்துவின் மனைவி 

 

"...நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன்..." - மத்தேயு 27:19

 

பிலாத்துவின் மனைவி, இயேசுவின் விசாரணை பற்றி அறிந்து, தன்னுடைய கணவர் பிலாத்து இயேசுவை தவறாக தீர்ப்பு செய்து விடக் கூடாதென்று அவரிடம் ஆள் அனுப்பி, தன் கணவரை எச்சரிக்கிறார். பிலாத்து ஆளுநராக யூதேயாவில் ரோமப் பேரரசால் நியமிக்கப்பட்டவர். யூதர்கள் பொறாமையால் இயேசுவை மரண தண்டனைக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகின்றனர் என்று பிலாத்து உணர்ந்தார். இதற்கு காரணம் பிலாத்துவின் மனைவி கண்ட கனவின் மூலம் உணர்த்தப்பட்ட காரியங்கள் மற்றும் இயேசுவைக் குறித்து அவர் கேள்விப்பட்டிருந்த செய்திகள்! மத்தேயுவில் மட்டுமே இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பிலாத்துவின் மனைவியின் பெயர் திருமறையில் கூறப்படாவிட்டாலும், அவரின் பெயர் கிளெடியா ப்ரோகுலா (Claudia Procula) என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவர் யூத நம்பிக்கை உடையவராயிருந்து பின்னர் கிறிஸ்தவராக மாறினார் என்று சொல்லப்படுகின்றது. கிரேக்க திருச்சபை அவருக்கு புனிதர் பட்டம் வழங்கியுள்ளது. அவருடைய கனவு அவரை அதிக கவலைக்குள்ளாக்கியது. தன் கணவர் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், செய்தி அனுப்புகிறார். இது வழக்கத்திற்கு மாறானது என்றாலும், இயேசுவைப் பற்றிய கனவு அவரை இவ்வாறு செய்யத் தூண்டியது. ஒரு வேளை கிளெடியா இயேசுவை தெருக்களில் பார்த்திருக்கலாம். அவர் செய்த அற்புதங்களை குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். பிலாத்துவுடன் பேசும் போது, இயேசுவைப் பற்றி அவர்கள் பகிர்ந்திருக்கலாம். ஆனால் ஒன்று நிச்சயம். அவருடைய கனவு ஒரு தெய்வீக வெளிப்பாடு. அதன் மூலம் அவர் இயேசு நேர்மையானவர் என்பதை அறிந்து கொண்டார். இயேசுவின் சிலுவை மரணத்தில் அவர் நீதிமான் என்று சான்று அளித்தவர்களில் கிளெடியா மிக முக்கிய பங்கு வகிக்கிறார். தன் கனவில் இயேசுவால் பாடுபட்டதாக கூறினார் என்று கூறும்போது, அவர் இயேசுவின் பாடுகளையும் கனவிலே கண்டிருக்க வேண்டும். இயேசு படுகிற பாடுகளை காண்கிறபோது, அவரால் அந்த துக்கத்தை பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

   

இயேசுவின் சிலுவை தண்டனைத் தீர்ப்பில் பிலாத்துவின் மனைவியால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் குற்றமற்ற இயேசுவை விடுவிக்க ஒரு பெண் முயற்சித்தார் என்பது சிறப்பானது. நம்முடைய சாட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தள்ளப்பட்டாலும் நாமும் இப்பெண்ணைப் போல ஆண்டவராகிய இயேசுவுக்காக வாழ்வோம். அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். (2 தீமோ. 2:12)

- Rev.எலிசபெத்

 

ஜெபக்குறிப்பு :-

மிஷனெரிகள் தங்கி பயிற்சி பெற மிஷனெரி பயிற்சி கட்டடத்திற்கான அரசாங்க அனுமதி கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al