Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.10.2025
Share:

By Village Missionary Movement

Friday, 10-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 10.10.2025

 

குருடனுக்கு வழிகாட்டும் குருடன்  

 

"உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,... அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்" - சங்கீதம் 51:12,13

 

'பிரேயர் ஹைடு' என்று அழைக்கப்படும் 'ஜான் ஹைடு' என்ற மிஷனெரி இந்தியாவில் ஊழியம் செய்வதற்காக கப்பலில் பயணப்பட்டார். அவர் கப்பல் ஏறும்போது அவரிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் தன் தகப்பனுடைய சிநேகிதர் இவ்வாறு எழுதியிருந்தார். "ஜான், நீ பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும் வரை உனக்காக நான் ஜெபித்துக் கொண்டே இருப்பேன்" என்பதே. இதை வாசித்த ஜான் ஹைடு, "நான் ஆவியானவரால் நிரப்பப்படாமலா இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்கிறேன்" என கடுங்கோபம் கொண்டார். சற்று நேரத்தில் ஆவியானவரால் உணர்த்தப்பட்டு, தனக்குள்ளிருந்த வெறுமையையும், தான் மிஷனெரியாகச் செல்ல கொஞ்சம் கூட தகுதியில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள அழுது ஜெபிக்க ஆரம்பித்தார். எந்த பயனுமில்லை. அப்பொழுது தான் இன்னமும் இரட்சிக்கப்படவில்லை என்று ஆவியானவரால் உணர்த்தப்பட்டார். ஒரு சுவிசேஷக் கூட்டத்தில் ஒருவர் இவரிடம் வந்து "மிஷனெரி அவர்களே, நீங்கள் இரட்சிப்பை அடைந்திருக்கிறீர்களா? என்று கேட்ட கேள்வி இவரின் உள்ளத்தையே உடைத்து விட்டது. உடனே "எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்து என்னை இரட்சியும்; இல்லாவிட்டால் நான் சுவிசேஷம் சொல்லாமல் அமெரிக்கா சென்று விடுவேன்" என்று ஜெபிக்க ஆரம்பித்தார். ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் ஜான் ஹைடுவை இரட்சித்து பாவப்பிடியிலிருந்து விடுதலை கொடுத்து, ஆவியின் அபிஷேகத்தினாலும், வல்லமையினாலும், ஜெப ஆவியினாலும் அளவில்லாமல் நிறைத்தார். இதன் பின்பு மக்களுக்காக இவர் ஜெபிக்கும்போதே மக்கள் இரட்சிப்படைந்து, ஜெப ஆவியினால் நிரப்பப்பட்டு அபிஷேகத்தை பெற்றுக் கொண்டனர்.

 

இந்நாட்களில் குறிப்பாக அநேக வாலிபர்கள் இரட்சிப்பின் அனுபவம் இல்லாமலேயே ஊழியம் செய்வதைப் பார்க்க முடிகிறது. அருமையாக பாடல் பாடினாலோ, இசைக் கருவிகளை வாசித்தாலோ, ஜெபித்தாலோ, ஊழியர்களுடைய, போதகர்களுடைய பிள்ளைகளாக இருந்தாலோ தாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டதாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இவர்கள் தான் இடறுவதுமன்றி, மற்றவர்களையும் இடறப் பண்ணுகிறார்கள். இயேசுவும் இப்படிப்பட்டவர்களை நோக்கி, குருடனுக்குக் குருடன் வழிகாட்டக் கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? என்றார். தேவனால் உணர்த்தப்பட்ட ஜான் ஹைடு மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு அபிஷேகத்தினால் நிரப்பப்பட்டு பின்னர் ஊழியம் செய்ததைப் போல, ஊழியம் செய்பவர்களும் முதலில் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று பின்னர் ஊழியம் செய்தால் நலமாயிருக்கும். அப்போதுதான் "பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்" என்ற வசனம் (சங்கீதம் 51:13) நிறைவேறும்.

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்

 

ஜெபக்குறிப்பு:-

மிஷனெரி பயிற்சி கட்டடம் கட்ட அநேகர் தோள் கொடுக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al