Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06.10.2025
Share:

By Village Missionary Movement

Monday, 06-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 06.10.2025

 

நன்றி கூறுங்கள்

 

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" - சங்கீதம் 34:1

  

ஒரு வனாந்தரத்தில் சிறகுகளில்லாத சிறிய குருவி ஒன்று உணவு, தண்ணீர் எதுவும் இன்றி சோர்ந்து போய் வருத்தத்துடன் இருந்தது. ஒரு நாள் அந்த வனாந்தரத்தின் வழியாக ஒரு தேவதூதன் சென்றார். அந்த குருவி அவரிடம், எங்கே போகிறீர்கள் என கேட்டது. அதற்கு அந்த தூதன், தான் ஆண்டவரை பார்க்க போவதாக கூறினார். உடனே அந்த குருவி, நீங்கள் ஆண்டவரிடம் நான் எவ்வளவு நாள் இப்படியே இருப்பது? இந்த வாழ்விற்கு ஒரு முடிவே இல்லையா? என கேட்கும் படி சொன்னது. தேவ தூதனும் பரலோகத்திற்கு சென்று ஆண்டவரிடம் அந்த குருவி கேட்க சொன்னதை கேட்டார். அதற்கு ஆண்டவர், "ஆம், கடைசி வரை அந்த குருவியின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும்" என சிரித்துக் கொண்டே கூறினார். தேவ தூதனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆண்டவர் தூதனிடம், நான் சொல்லும் இந்த ஜெபத்தை தினமும் அந்த குருவியை சொல்லச் சொல் என்றார். அது என்ன ஜெபம் தெரியுமா? "ஆண்டவரே! அனைத்திற்கும் நன்றி" என்று. தூதனும் அந்த குருவியிடம் சென்று ஆண்டவர் சொன்னதை சொல்லிவிட்டு கடந்து போனார். அந்த குருவியும் தினமும் தன் குரலை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி "அனைத்திற்கும் நன்றி ஆண்டவரே" என்று சொல்ல ஆரம்பித்தது. எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்த குருவியோ தொடர்ந்து ஒரு நாள் தவறாமல் அந்த ஜெபத்தை சொல்லிக் கொண்டே இருந்தது. 

 

ஒரு நாள் அந்த வனாந்தரத்தில் மழை பெய்தது. செடிகள் முளைக்க தொடங்கியது. ஒரு செடியின் கீழ் தேங்கி இருந்த தண்ணீரில் குருவி தன் உருவத்தைப் பார்த்தது. அதன் மேல் அழகாக இறகுகள் முளைத்திருந்தது. அதற்கு ஒரே சந்தோஷம். இப்போது அதற்கு தினமும் உணவு கிடைத்தது. ஆனாலும் எல்லாம் இருக்கிறது என்று அது அந்த ஜெபத்தை நிறுத்தவில்லை.  

 

வேதத்திலே தாவீது ராஜாவின் வாழ்க்கை சொகுசான வாழ்க்கை இல்லை. சங்கீதம் 34 ஐ எழுதும் போது தன் மகன் அபிமெலேக்கினால் துரத்திவிடப்பட்டிருந்தார். ஆம், சிறு வயதில் இருந்தே அவர் அநேக துன்பங்களை அனுபவித்தவர். ஆனால் அவர் கர்த்தருக்கு ஒருபோதும் நன்றி சொல்லாமல் இருந்ததே இல்லை. கடினமான நேரங்களில் நாம் தேவனைத் துதிக்கிறோமா? என்று நம் தேவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார். "இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்"(ஏசாயா43:21). ஆண்டவர் நம் துதியில் பிரியப்படுகிறவர். நம் வாழ்விலும், தாழ்விலும், நாம் தேவனை நன்றியோடு துதித்தோமானால் நம் வாழ்க்கையே மாறிப்போகும். அந்த சிறிய குருவிக்கு ஆண்டவர் சொல்லி கொடுத்த ஜெபத்தை நாமும் தினமும் மறக்காமல் செய்வோமா? 

 

“Thank you Lord Jesus for everything”. Amen      

- Mrs. ஷீலா ஜான்

 

ஜெபக்குறிப்பு:-

நம்மோடு இணைந்துள்ள தெபோராள் ஊழியர்களின் ஊழியங்களுக்காக   

ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet casibom bets10 extrabet royalbet süperbetin casibom giriş betcio jojobet giriş casibom milanobet piabellacasino betpas bahiscasino atlasbet betpas casinoroyal bahiscasino ngsbahis betplay holiganbet jojobet casibom holiganbet jojobet casibom vaycasino romabet