Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.10.2025
Share:

By Village Missionary Movement

Sunday, 05-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 05.10.2025

 

இயேசு இருந்தால் போதும்

 

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" - சங்கீதம் 23:1

 

அன்பு செல்லங்களே! Happy யா இருக்கீங்களா. இயேசப்பா கொடுத்த நாட்களை வீணாக கழிக்காம படிக்க வேண்டிய நேரத்தில் நல்லா படிக்கணும் o.k வா குட்டீஸ்! இப்போ story கேட்கலாமா? உஷா, நித்யா என்று ஒரே தெருவை சேர்ந்த இரண்டு friends இருந்தாங்க. சின்ன வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். இரண்டு பேருக்கும் நல்ல வேலையும் கிடைத்தது. உஷா அக்கா எப்பவுமே சுறுசுறுப்பாய், உற்சாகமாய் வேலைக்கு போவாங்க, ரொம்ப happy யா இருப்பாங்க. எதைக் குறித்தும் கவலைப்படவே மாட்டாங்க. ஆனால் நித்யா அக்கா எப்பவும் சோக முகத்தோடு இருப்பாங்க. நல்ல வேலை, பணம் இருந்தாலும் அவங்களால சந்தோஷமாகவே இருக்க முடியல. உஷா அக்கா முகத்தில் இருக்கிற சந்தோஷத்தை பார்த்த நித்யா அக்காவுக்கு ரொம்ப ஆச்சரியம். அவங்க சந்தோஷத்தின் இரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாங்க. என்ன குட்டீஸ்! உஷா அக்காவை பார்க்க உங்களுக்கும் ஆசையா? வாங்க போய் பார்க்கலாம்.

       

Hai உஷா! How are you? ன்னு கேட்ட நித்யாவை பார்த்து புன்னகையோடு வந்தாங்க. அவங்களுக்கு டீ, வடை கொடுத்து ரொம்ப அருமையா உபசரித்தார்கள். உஷா உனக்கு கவலையே இருக்காதா? வயசான பிறகு நம்மள யார் பார்ப்பாங்க. யார் நமக்கு உதவி செய்வாங்க, இப்படி எதைக் குறித்தும் கவலைப்பட மாட்டியான்னு நித்யா அக்கா கேட்டதும், உஷா அக்கா என்ன சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க குட்டீஸ்! நானே சொல்லட்டுமா? இங்க பாரு நித்யா, நான் காலையில் எழுந்ததும் இயேசப்பாவுக்கு முதலிடம் கொடுத்து prayer பண்ணுவேன். அவர் என் மேய்ப்பராயிருப்பதால் எனக்கு எதைக் குறித்தும் கவலையே இல்லை. என்ன கஷ்டம், நஷ்டம் வந்தாலும் இயேசப்பா பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதால் நான் எப்பவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்ற உஷா அக்காவை கண் சிமிட்டாம பார்த்துட்டு இருந்தாங்க... என்ன நித்யா பயங்கர யோசனையில் மூழ்கிட்டியே என்றதும், உன் சந்தோஷத்தின் இரகசியத்தை தெரிந்து கொண்டேன்னு சொன்னாங்க நித்யா அக்கா. இயேசு இல்லாத வாழ்க்கை வெறுமையானது என்று புரிந்து கொண்டேன் உஷா. o.k bye என்று கிளம்பின நித்யாவின் முகத்தில் புன்னகை மலர ஆரம்பித்தது. எனக்கும் இயேசப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்து விட்டது என்று சொன்னாங்க. குட்டீஸ், இந்த உலகத்தில் நிறைய பணம், புகழ், வசதி இருந்தாலும் இயேசு இல்லையென்றால் அங்கே சந்தோஷமே இருக்காது. இயேசப்பாவுக்கு முதலிடம் கொடுத்து அவர் தரும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுங்கள் குட்டி செல்லங்களே.

- Sis.தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet