By Village Missionary Movement
Thursday, 03-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 03-06-2021
முழு நிச்சயம்
“தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.” – ரோமர் 4:21
இரவு நேரத்தில் ஒரு மனிதன் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென கால் வழுக்கி உருள ஆரம்பித்தான், கடுமையான முயற்சிக்குப் பின் கையில் கிடைத்த மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கினான். தேவனே உதவி செய்யும் என்று ஜெபித்தான். தேவன், “கையை விட்டுவிடு உதவி செய்கிறேன்” என்றார். “ஆண்டவரே, எப்படி விட முடியும்” என்று இறுகப்பற்றிக் கொண்டான். கைவலி அதிகமானது மறுபடியும் உதவி செய்யும்படி வேண்டினான். என் மீது நம்பிக்கை வைத்து கிளையை விட்டுவிடு என்று மறுபடியும் பதில் வந்தது. எவ்வளவு ஆழமோ, என்ன ஆகுமோ என்று நினைத்து கிளையை விட மனதில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தான். நேரம் கடந்து விடியத் தொடங்கியது. வெளிச்சத்தில் மெதுவாக கீழே பார்த்தான், காலுக்கும் தரைக்கும் மூன்று அடி மாத்திரம் உயரமிருந்தது. தேவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கிளையை விட்டிருந்தால் இராத்திரி முழுவதும் மரண பயத்தோடும், நடுக்கத்தோடும், வலியோடும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
வேதத்திலே, ஆபிரகாமைக் குறித்து, “அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:19-21) என்று வாசிக்கிறோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதரனே, சகோதரியே! நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற எந்த காரியத்தையும் கர்த்தரை நம்பி, அவர் கரத்தில் விட்டுவிட்டீர்களா? அல்லது அப்படி நடக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று கிளையைப் பிடித்தது போல் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களா? கர்த்தரை நம்பி அவர் கையில் ஒப்புவித்த உங்கள் காரியங்கள் எதுவாயிருந்தாலும் சரியாய், நேர்த்தியாய் செய்து முடிக்க அவர் ஆயத்தம். அற்புதம் பெற நீங்கள் ஆயத்தமா?
- L. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
மிஷனெரியின் மனைவி நிரோஷா அவர்களுக்கு தேவன் சுகப்பிரசவத்தைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250