Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.09.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Sep-2025

இன்றைய தியானம்(Tamil) 21.09.2025 (Kids Special)

 

வந்து பார் 

 

"என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக் கொண்டிருக்கும்" - சங்கீதம் 35:28

 

ஹாய் குட்டீஸ்! உங்களுக்கு school ல நிறைய friends இருக்காங்களா? அவங்க கூட பேசுறப்ப, விளையாடுறப்ப ரொம்ப சந்தோஷமா ஜாலியா இருக்கும் அப்படித்தானே! விளையாடுவது மட்டுமல்ல அவர்கள் தவறான வழியில் நடந்தால் அவர்களை நல்ல வழியில் நடத்துவதும் உன் பொறுப்பு தான். அதை பற்றி ஒரு story கேட்கலாமா?

 

தீபக்கும், நேட்டும் நல்ல நண்பர்கள். லீவு நாட்களில் cricket விளையாடுவது, சேர்ந்து home work எழுதுவது இப்படி இரண்டு பேரும் இணைபிரியா நண்பர்கள். ஒருநாள் இருவரும் school ground ல பேசிக்கிட்டே நடந்து போனாங்க. நேட், தீபக்கிடம் நாளைக்கு sunday என்னடா செய்யப் போற என்று கேட்டான். T.V ல cricket final மேட்ச் பார்க்கப் போறேன்டா, நீயும் வா என்றான் தீபக். இல்லை இல்லை நாளைக்கு எனக்கு Sunday class இருக்குது. நான் miss பண்ணமாட்டேன். அமுதா அக்கா ரொம்ப super ரா பாட்டு, கதை சொல்லிக் கொடுப்பார்கள். நீயும் அங்கே வந்து பாரேன் உனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்குமே.... என்றான் நேட். தீபக் கோபமாக ஏன் இப்படி முட்டாளா இருக்குற. கிடைத்த லீவு நாட்களை enjoy பண்ணனும். அதை விட்டுட்டு......என்று பேசிக் கொண்டிருக்கும் போதே bell அடிக்கிற சத்தம் கேட்டதும், அவரவர் bag ஐ எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போனாங்க.

 

Monday அன்று தீபக் school க்குள்ளே நுழையிரப்ப யாரோ ரொம்ப சந்தோஷமா, அழகா பாடுற சத்தம் கேட்டது. என்னடா நேட், நீயா பாடினது? அழகா இனிமையா இருக்குதே இந்த song என்றான் தீபக். ஆமாடா, நேற்று Sunday class க்கு போனப்ப இந்த song சொல்லி தந்தாங்க. அது மட்டுமில்ல கதை, games, gift ன்று ரொம்ப ஜாலியா இருந்துச்சு. உடனே தீபக், கண்டிப்பா நானும் அடுத்த வாரம் உன்கூட Sunday class க்கு வரேன்டான்னு சொன்னதும், நேட்டுக்கு பயங்கர சந்தோஷம். நான் உனக்காக JESUS கிட்ட pray பண்ணினேன். நீ வந்து பார் என்று அழைத்தான் நேட். Prayer பண்ணினோம்னா இயேசப்பாகிட்ட இருந்து பதில் கிடைக்கும் என்றும் கூறினான். ஜெபத்தைக் கேட்ட இயேசப்பாவுக்கு நன்றி சொன்னான் நேட். அடுத்த பீரியட் English miss வந்தாங்க.... Test எழுத ரெடியா? ன்னு கேட்டுக்கொண்டே question paper ஐ கொடுத்தாங்க. தீபக்கிற்கு படித்தது ஞாபகம் வருமா என்ற பயம்! இயேசப்பாவிடம் ஜெபிக்கிறதற்கு ஏன் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும். இப்போதே ஜெபிக்க போகிறேன் என்று மனதிற்குள் குட்டி ஜெபம் செய்து super ரா test எழுதினான்.

        

 நீங்க எப்படி குட்டீஸ்! School ல படிக்கும்போது, சாப்பிடும் போது, games விளையாடும் போதும் JESUS பற்றி உன் நண்பர்களுக்கு சொல்லி, அவர்களுக்காய் ஜெபிக்க வேண்டும் o.k வா. இயேசுவை பிறருக்கு அறிவிப்பது போல மேன்மையானது எதுவுமே இல்லை குட்டீஸ்!

- Mrs.. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş