Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.09.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 20-Sep-2025

இன்றைய தியானம்(Tamil) 20.09.2025

 

யார் எழுப்புதலின் வீரன்?

 

"அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்" - பிலிப்பியர் 3:11

 

இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக எப்படிப்பட்டவர்களை தேவன் தேடிக்கொண்டிருக்கிறார் என்று காண்போமா?

 

  ஜெபமே அவர்களது முக்கிய அலுவலாக இருக்கவேண்டும்.

 

  ஆத்தும அறுவடையே அவர்களது குறிக்கோளாக இருக்கவேண்டும்.

 

  தேவ சமுகமே அவர்களது இன்பமாக இருக்கவேண்டும்.

 

  தேவ ஊழியமே அவர்களது பாரமாக இருக்கவேண்டும்.

 

  கடின உழைப்பே அவர்களது பிரியமாக இருக்கவேண்டும்.

 

  கர்த்தருக்காகப் படும் பாடுகள் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கவேண்டும்.

 

  உலகம் அவர்களுக்கு வனாந்தரமாக இருக்கவேண்டும்.

 

  சுகபோகம் அவர்களுக்கு குப்பையாக இருக்கவேண்டும்.

 

  நேர்மை அவர்களுடன் பிறந்ததாக இருக்கவேண்டும்.

 

  மாய்மாலம் அவர்களுக்கு அருவருப்பாக இருக்கவேண்டும்.

 

  பாவம் அவர்களுக்கு கசப்பாக இருக்கவேண்டும்.

 

  மன்னிக்கும் சுபாவம் அவர்களது நண்பனாக இருக்கவேண்டும்.

 

  வேதவசனம் அவர்களது ஆகாரமாக இருக்கவேண்டும்.

 

  பணஆசை அவர்களுக்கு எதிரியாக இருக்கவேண்டும்.

 

  ஜாதி வேற்றுமை அவர்களுக்கு வாந்தியாக இருக்கவேண்டும்.

 

  அன்பு அவர்கள் வாழ்வில் ஜீவ ஊற்றாக இருக்கவேண்டும்.

 

  ஆவியின் அபிஷேகம் அவர்களது ஆசையாக இருக்கவேண்டும்.

  பிரசங்கிப்பதில் அவர்கள் நயவசனிப்பில்லாத பவுலாக இருக்கவேண்டும்.

 

  உபவாசம் அவர்களது உயிர்த்தோழனாய் இருக்கவேண்டும்.

 

  தேவசித்தம் செய்தல் அவர்களது விருந்தாக இருக்கவேண்டும்.

 

  பரிசுத்தமே அவர்களது அலங்காரமாக இருக்கவேண்டும்.

 

  பரலோகமே அவர்களது ஆஸ்தியாக இருக்கவேண்டும்.

  

 இறுதியாக, நரகத்தை நடுங்கவைத்து, பாதாளத்தை பதறவைத்து, பரலோகத்தை பரவசப்படுத்தி, பரமனையே பாராட்டவைத்து, தேசத்தையே தேவனை நோக்கித் திருப்புகிறவனே எழுப்புதல் வீரன்! எழுப்புதல் வீரனிடம் பேச்சைவிட ஜெபம் அதிகமாயிருக்கும். தர்க்கங்களைவிட தாக்கம் அதிகமாயிருக்கும். திட்டங்களைவிட செயல்பாடு அதிகமாயிருக்கும். எழுப்புதல் வீரன் தீக்குச்சிதான் . . . ஆனால் அவன் பற்ற வைப்பது அடுப்பை அல்ல. . . வெடிகுண்டை!

- தெரிந்தெடுக்கப்பட்டது

 

ஜெபக்குறிப்பு:-

நமது பத்திரிக்கை ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş