Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.09.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 10-Sep-2025

இன்றைய தியானம்(Tamil) 10.09.2025

 

கண் உறங்கா காவலாளி

 

"இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை." - சங்கீதம் 121:4

 

தூக்கம் என்பது இறைவன் நமக்குக் கிருபையாகக் கொடுத்துள்ள வரப்பிரசாதமாகும். உழைத்துக் கொண்டிருக்கிற மனிதன் ஓய்வெடுக்க நித்திரை அவசியம். கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையளிக்கிறார், என்றும் சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன் கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் (சங்கீதம் 4:8) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.

 

இன்று கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களும் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். வழக்கமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு நித்திரை செய்வோரும் உண்டு. தூங்காமல் இருப்பது உடலுக்குக் கேடு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தில் பாதிக்கப்படும்போது தூக்கம் வருவதில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கூட உறங்காமல் கண் விழித்து நம்மைப் பாதுகாக்கும் நம் ஆண்டவரை நோக்குவதில்லை.

 

இங்கிலாந்து தேசத்திலுள்ள பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த மெலரின் வெஸ்டன் என்ற பெண்மணி 449 மணி நேரம் தொடர்ச்சியாகத் தூங்காமல் கண் விழித்திருந்து சாதனை புரிந்துள்ளார். ஏப்ரல் 14 ம் தேதி முதல் மே 5 ம் தேதி வரை ஒரு Rocking chair ல் உட்கார்ந்து இந்நிகழ்வை நடத்தியுள்ளார். இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நவீன உலகில் தூங்குவதற்கு நேரமேயில்லை என்று அநேகர் கூறுகின்றனர்.

 

சராசரி மனிதன் ஒருநாளில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நாம் நன்கு தூங்கி ஓய்ந்திருக்கும் வேளையில் நம்மைக்காக்கும் தேவன், தூங்காமல் கண் விழித்து நம்மை காப்பது எவ்வளவு பெரிய கிருபையின் சிலாக்கியம். எந்த நேரமும் அவரது கண்கள் நம்மைக் காண்கிறவைகளாகவும், அவரது செவிகள் நமக்கு நேராகத் திறந்தவைகளுமாயிருப்பது எத்தனை விந்தை. நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோமா? கண்ணின் கருவிழியை இமை பாதுகாப்பது போல, நம் தேவன் நம்மை காக்கிறார். தம்முடைய பிள்ளைகளாகிய நம்மை சகலவிதமான பொல்லாப்பினின்றும், சத்துருக்களின் கிரியைகளினின்றும் கண்உறங்காமல் பாதுகாக்கும் நம் தேவனின், விலைமதிப்பற்ற அன்பை உணர்ந்தவர்களாய் நம் வாழ்வை அவர் கரங்களில் அர்ப்பணிப்போம்.

 

இரவும் பகலும் கண்ணுறங்காமல் என்னைக் காக்கும் தேவனே! கல்வாரி நாயகனே! நானும் விழிப்போடு என் வாழ்வைக் காத்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!

- Mrs. ஜாஸ்மின் பால்

 

ஜெபக்குறிப்பு:-

நம் டியூஷன் சென்டருக்கு வரும் பிள்ளைகள் ஞானத்தால் நிரப்பப்பட ஜெபியுங்கள்..

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al