Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31.08.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 31-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 31.08.2025 (Kids Special)

 

குட்டி Hero

 

"...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" - 2 கொரி. 9:7

 

Hello குட்டீஸ், கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்து, அலைகளில் விளையாடி செம்ம ஜாலியா enjoy பண்ணியிருப்பீங்க. கடல்ன்னா யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்கும் பிடிக்கும் அப்படித்தானே! Jesus கூட இந்த பூமியில் வாழ்ந்த போது கடற்கரை, மலை பகுதியில் நிறைய பிரசங்கம் பண்ணியிருக்காங்க. எனக்கும் கூட இந்த இடங்கள் ரொம்பவே பிடிக்கும் குட்டீஸ். இயேசப்பா செய்த அற்புதங்களை கண்ட மக்கள் கூட்டங்கூட்டமாய் இயேசுவை தேடி வந்தாங்க. இயேசு மலையின் மேல் ஏறி பிரசங்கம் பண்ண ஆரம்பித்தார். இதை கேள்விப்பட்ட ஜனங்கள் இயேசுவைத் தேடி வந்து கொண்டே இருந்தார்கள். சின்ன பிள்ளைகள், வாலிபர்கள், பெரியவங்க எல்லாரும் இயேசப்பாவிடம் வந்தா ஏதாவது நன்மை கிடைக்குமென்று நினைத்தாங்க.   

 

அந்தக் கூட்டத்தில் ஒரு சிறு பையன் Jesus பேசும் வார்த்தைகளை கேட்டு, தான் கொண்டு வந்த சாப்பாட்டையும் மறந்து உட்கார்ந்திருந்தான். அப்பொழுது தான் உங்ககிட்ட சாப்பிட ஏதாவது இருக்குதா? ன்னு கேட்கிற சத்தத்தை கேட்டான். உடனே தன் பையிலிருக்கிற சாப்பாட்டை, இயேசுவின் சீஷனாகிய அந்திரேயாவிடம் கொடுத்தான். உங்களுக்கு பிடித்த snacks ஐ friends க்கு கொடுக்கக் கூட மனசு வராது தானே! இந்த சின்ன பையனுக்கு fish னா ரொம்ப பிடிக்கும். ஆனாலும் அதை இயேசப்பாவின் கரங்களில் கொடுத்தான். அதில் 5 அப்பமும், 2 மீன்களும் இருந்தது. அவன் தோள்களில் தட்டிக் கொடுத்த இயேசப்பா, எல்லாரையும் வரிசையாய் உட்காரச் சொன்னார். பின்பு அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, சீஷர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை பந்தியிருந்தவர்களுக்கு எடுத்து வைக்க, வைக்க குறையாமல் பெருகிக்கொண்டேயிருந்தது. என்ன ஆச்சரியம்! கிட்டத்தட்ட ஆண்கள் மட்டும் 5000 பேர். பெண்கள், குழந்தைகள் கணக்கு சொல்லப்படவில்லை. சுமார் 10,000 திற்கும் அதிகமானோர் திருப்தியாக சாப்பிட்டிருப்பாங்க தானே குட்டீஸ். மீதி 12 கூடை நிறையவும் எடுத்தாங்க. 

 

இந்த மகிமையான அற்புதத்தைக் கண்ட மக்கள் இயேசுவின் மீது அதிகமாய் நம்பிக்கை வைத்தார்கள். இயேசப்பாவிடம் ஏதாவது கிடைக்கும் என்று வந்த மக்கள் கூட்டத்தில், தன்னிடம் உள்ளதை இயேசுவுக்கு கொடுத்த சிறுவனைப் போல நீங்களும் உங்களையே இயேசப்பாவுக்கு கொடுக்கலாம். இன்னும் நீங்க சேமித்த பணத்தையோ, தாலந்தையா, நேரத்தையோ கொடுத்து இயேசப்பாவை சந்தோஷப்படுத்துங்க குட்டி செல்லங்களே!

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet casibom bets10 extrabet royalbet süperbetin casibom giriş casibom jojobet giriş casibom milanobet piabellacasino betpas bahiscasino atlasbet betpas casinoroyal bahiscasino ngsbahis betplay holiganbet jojobet casibom holiganbet jojobet casibom vaycasino romabet