Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.08.2025
Share:

By Village Missionary Movement

Monday, 25-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 25.08.2025

 

நன்மையினாலே வெல்லு

 

"...நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு" - ரோமர் 12:21

 

ஒரு பெரும் செல்வந்தர் தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தை தனக்கு மட்டுமல்லாமல், எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற பரந்த எண்ணங்கொண்டார். எனவே தன் சொந்த இடத்தில் தன் சொந்த பணத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்டி, அதன் பின்புறம் கல்லறைத் தோட்டத்திற்கென்று இடமும் கொடுத்து அதை ஊர் மக்களுக்கு அர்ப்பணித்தார். ஜனவரி முதல் தேதியில், ஒரே பந்தியில் உண்ணும் ஐக்கியமான சம பந்திக்கு எல்லோரையும் அழைத்து தன் வீட்டிலேயே சிறப்பான விருந்து கொடுப்பார். ஆண்டவரும் இவரை சகலவிதத்திலும் ஆசீர்வதித்தார். இதை அவரது உறவினர் ஒருவரால் பொறுக்க முடியவில்லை.

 

நல்ல உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அந்த உறவினருக்கும் கை நிறைய பணம், சொந்த வீடு என வசதிகள் பல இருந்த போதிலும் செல்வந்தரின் செழிப்பைத் தாங்க முடியாமல் அவர் மீது பொறாமை கொண்டதால் இவரது தூக்கமே கெட்டது. செல்வந்தரின் நிலத்தில் எது விதைத்தாலும் அது நன்கு வளர்ந்து, அமோகமாக விளைச்சலை தருகிறது. இவருடைய தொழிலிலும் நல்ல இலாபம் கிடைத்து நிறைய பணம் கிடைக்கிறது, என ஊரெங்கும் சதாகாலமும் புலம்பித்திரிந்தார். செல்வந்தருக்கு எப்படியாகிலும் நஷ்டம் ஏற்பட்டுவிடாதா என தீயஎண்ணங்கொண்டவராய் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே ஒருநாள் அந்த செல்வந்தரும் தனது உறவினரை அழைத்து, எனக்கு மிகுந்த இலாபம் கொடுத்து வந்த தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எனவே அதனை சரிசெய்ய கொஞ்சம் பணம் கடனாக வேண்டுமென கேட்டதும், சந்தோஷத்துடன் பணத்தை கடனாக கொடுத்துவிட்டு ஊர் முழுவதும் செல்வந்தரின் இழப்பிற்கு நான் தான் பணம் கொடுத்து உதவினேன் என்று பெருமையுடன் மார்தட்டி சொன்னார். பாருங்கள், இப்படிப்பட்டதான மனிதர்களை நாம் இன்றும் இவ்வுலகில் காணமுடியும். உண்மை என்னவென்றால் உறவினரது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே, செல்வந்தர் அவரிடம் கடனை கேட்டார்.

 

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில், உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள் என்றும், நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு என எழுதியுள்ளார்.

 

பிரியமானவர்களே! கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று நாம் வேதத்தில் பார்க்கிறோம். நமக்கு ஐசுவரியத்தை தருகிறவர் கர்த்தர். யாரையும் ஐசுவரியவனாக்கவும், தரித்திரனாக்கவும் அவராலே முடியும். ஆண்டவர் நம்மை விட மற்றவர்களை, நம் வீட்டின் அருகில் இருப்பவர்களை ஆசீர்வதித்து இருப்பாரென்றால் நாம் அதற்காக தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும். மாறாக அவர்கள் மீது பொறாமை கொள்ளவோ, எரிச்சலடையவோ வேண்டாம். அவருக்கு முன்பாக நாம் உத்தமமாய் நடப்போமென்றால் நிச்சயம் கர்த்தர் நம்மையும் ஆசீர்வதிப்பார். எனவே பிறருக்கு தீமை செய்கின்ற மனப்பான்மையை விட்டு, விட்டு தீமையை நன்மையினால் வெல்ல ஆண்டவரின் ஒத்தாசையை நாடுவோம்.

- K.S.மாணிக்கவாசகம்

 

ஜெபக்குறிப்பு:-

வில்லேஜ் டிவி ஊழியங்களின் தேவைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş