By Village Missionary Movement
Monday, 31-May-2021இன்றைய தியானம்(Tamil) 31-05-2021
அறியாத நாழிகை
“உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” – மத்தேயு 24:42
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்வைட் டி ஐசனோவர் ஒருமுறை விடுமுறையில் இருந்தபோது, அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 6-வயது நிரம்பிய பால் என்னும் சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தருவாயில் இருப்பதாகவும், அவன் அமெரிக்க அதிபரை பார்க்க விரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது அதிபரின் கவனத்திற்கு வந்தபோது சிறுவனை போய் பார்க்க முடிவு செய்து, சிறுவனின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார். சிறுவனின் தகப்பன் டொனால்ட் கதவை திறந்தபோது அமெரிக்க அதிபரைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அதிபரின் வருகையை எதிர்பாராததினால் சிறுவனின் தகப்பன் சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன் செய்யாமல், வீட்டின் பொருட்களெல்லாம் ஆங்காங்கே ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்ததும் அவரை சங்கடப்படுத்தியது. இருப்பினும் அவர் அதிபரை உள்ளே அழைத்து சிறுவனிடம் கூட்டிக் கொண்டு சென்றார். அதிபர் சற்று நேரம் அந்த சிறுவனிடம் பேசிவிட்டு கிளம்பினார். அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அதுவே அந்த நாளின் பேச்சாக இருந்தது. ஆனால் டொனால்டிற்கோ சந்தோஷமேயில்லை. ஏனென்றால் அவர்கள் எழுதியிருந்த லெட்டர் அதிபரை சென்றடையும் என்றோ, அவர் வருவார் என்றோ அவர் சற்றும் எதிர்பாராததே ஆகும்.
10 கன்னிகைகள் உவமையிலே ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். நினையாத நாழிகையிலே மணவாளன் வந்தபோது புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். மணவாளனாகிய இயேசுவின் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். புத்தியில்லாதவர்களோ அந்த பெரிய வாய்ப்பை இழந்து போனார்கள்.
நம் இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்பது நம்மனைவருக்கும் நன்கு தெரிந்த சத்தியமாகும். ஆனால் நாம் எவ்வளவு தூரம் ஆயத்தமாயிருக்கிறோம் என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் வரவில்லையே என்ற எண்ணம் ஜனங்களுக்குள் இருக்கிறது. ஆகவே அஜாக்கிரதையோடு ஆயத்தமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. இந்த நம் மனநிலை மாறவேண்டும். ஆம் பிரியமானவர்களே! நம் ஆண்டவர் நாம் எதிர்பாராத நேரத்தில் வருவார். நாம் ஆயத்தமா? கறைதிரையற்ற இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்தியிருக்கிறோமா? அல்லது பல பாவ கறைகளோடு காணப்படுகிறோமா? இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் துரிதமாய் ஆயத்தமாவோம். நாம் நினையாத நாழிகையிலே அவர் வருவார். அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்.
- Mrs. ஜீவா விஜய்
ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணிக்கு அத்தியாவசிய தேவையான ஜெராக்ஸ் மிஷின் வாங்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250