By Village Missionary Movement
Sunday, 24-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 24.08.2025 (Kids Special)
காலத்தை பிரயோஜனப்படுத்து
"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்." - எபேசியர் 5:16
Hello குட்டீஸ்! விவசாயம் பண்றத பார்த்திருக்கீங்களா? அதைப்பற்றின கதையைத்தான் பார்க்கப்போகிறோம். மைக்கேல் - மல்லிகா இருவரும் விவசாயம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார்கள். இவர்களுடைய ஒரே மகள் தான் வின்சி. மகளை மிகவும் செல்லமாகவும், கர்த்தருக்குள்ளும் வளர்த்து வந்தார்கள். வின்சி சிறு வயதிலேயே நிறைய வசனங்களை மனப்பாடமாக சொல்லுவாள்.
நாட்கள் கடந்தன, வின்சி வளர்ந்து பெரியவளானாள். இப்பொழுது பிளஸ் 2 வந்துவிட்டாள். பெற்றோருடைய உதவி இல்லாமல் தானாக படிக்கக்கூடிய அளவிற்கு முதிர்ச்சியடைந்து விட்டாள். அது மட்டுமல்ல தனது பெற்றோர்களை ஏமாற்றவும் ஆரம்பித்து விட்டாள். காலையில் எழுந்ததும் போனும் கையுமாக தான் இருப்பாள். அம்மா வந்ததும் வேகமாக Bible ஐ திறந்து வைத்திருப்பாள், அல்லது பாடப் புத்தகத்தை கையில் வைத்திருப்பாள். அவளது அம்மாவும் பிள்ளை படித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்று சென்று விடுவார்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் தனது பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருந்தாள். அது மட்டுமல்ல School க்கு சென்றாலும் அங்கேயும் படிக்கிறவள் போல புத்தகத்தை திறந்து வைத்து, தனது தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள். ஆசிரியர் வந்ததும் படிப்பது போல் ஆக்டிங் பண்ணுவாள். எனவே படிப்பில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு வந்துவிட்டாள்.
பிளஸ் 2 முழு ஆண்டு தேர்வும் வந்தது. இப்பொழுது அவளும், அவளது தோழிகளும் தேர்வுக்கு ஆயத்தமாகி, Exam Hall ல் போய் அமர்ந்தார்கள். Question paper ரை கையில் வாங்கிய வின்சிக்கு ஒன்றுமே தெரியவில்லை. எதையோ எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டாள். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ரிசல்ட் ம் வந்தது. பார்த்தால் அந்த School ல் வின்சியைத் தவிர எல்லாரும் தேர்ச்சி அடைந்து விட்டார்கள். இவள் மட்டும் தான் fail. மற்றும் அவர்களெல்லாரும் மேற்படிப்பிற்காக வெளியூர் சென்றதால், புதிய நண்பர்களை சேர்த்துக் கொண்டார்கள். எனவே வின்சியை விட்டு விலக ஆரம்பித்தனர். ஒருநாள் school friends ஐ பார்த்து பேச போனாள். அவர்களோ இவளை கண்டுக்கொள்ளவில்லை. தங்களுக்கான புது friends உடன் ஜாலியாக இருந்தார்கள். அப்பொழுதுதான் வின்சி தனது தவறை உணர்ந்தாள். நான் ஏமாற்றியது எனது பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ அல்ல, என்னை நானே ஏமாற்றிக் கொண்டு நாட்களை வீணடித்து விட்டேனே என மிகவும் வருந்தினாள். எனது பெற்றோர்களின் கஷ்டங்களை உணராமல் இருந்துவிட்டேன் என்று எண்ணி மனங்கசந்து அழுது, தனது பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டாள். மீண்டும் நன்றாக படிக்க ஆரம்பித்தாள்.
அன்பு தம்பி தங்கச்சி, நீயும் இந்த வின்சியைப் போல படிக்கிறேன்னு சொல்லி Cell Phone, T.V யையும் பார்த்துக்கிட்டு, அப்பா அம்மாவை ஏமாத்திட்டு, நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறீங்களா? அப்படி இருந்தீங்கனா அதை இப்பவே விட்டு விடுங்க. அவங்கள ஏமாற்றுவதாக நினைத்து, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என்பதை நினைவில் கொண்டு, நன்றாக படி. காலத்தை வீணடித்து விடாதே. O.K வா குட்டீஸ்!
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864