Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-05-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 30-May-2021

இன்றைய தியானம்(Tamil) 30-05-2021 (Kids Special)

 

மிகப் பெரிய ஆயுதம் 

 

“கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.” – சங்கீதம் 121:7 

 

ஜோசப் அண்ணன் இறையியல் படிப்பிற்காக தன் சொந்த நாட்டைவிட்டு, வேறு தேசத்திற்குப் படிக்கச் சென்றார்கள். படிப்பு முடிந்ததும் 5 ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு திரும்ப ஆயத்தப்பட்டார்கள். கப்பல் பயணம் தாமதமானது. அதிக பனி மூட்டத்தால் கப்பல் முன்னே செல்ல முடியல. எல்லாருக்கும் ரொம்ப பயம். ஆனால் ஜோசப் அண்ணா பயமே இல்லாம இருந்தாங்க. என்ன நடந்தாலும் இயேசப்பா என் கூடவே இருக்காங்கன்னு சொல்வாங்க. பனி அதிகமானதே தவிர குறையவேயில்லை திடீரென்று கப்பல் பாறை மீது மோதி உடைந்துவிட்டது. நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரை சேர்ந்தார்கள். ஜோசப் அண்ணனுக்கு நீச்சல் தெரியாது சங்கீதம் 121ஆம் அதிகாரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார்.  

 

அடுத்த நாள் சூடான மணலில் படுத்திருப்பதை உணர்ந்தார். கண்விழித்து பார்த்தபோது, தன்னை சுற்றிலும் காட்டுவாசிகள் மேளதாளத்தோடு, ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு இருந்தாங்க. பாஷை ஒன்றுமே புரியவில்லை. திரும்பவும் 121ஆம் சங்கீதத்தை சொன்னாங்க, நீங்களும் இந்த அதிகாரத்தை மனப்பாடம் செய்யலாம். Ok ஆபத்தான நேரத்தில் வசனம் உன்னை பாதுகாக்கும். அடுத்து ஜோசப் அண்ணணை என்ன செய்தார்கள் தெரியுமா? மின் கம்பத்தில் கட்டி வைத்தார்கள். நல்ல விருந்து கிடைத்திருக்கிறது என்று நினைத்தார்கள். அப்பொழுது மின்கம்பத்திற்கு மேலே இரண்டு பறவைகள் வட்டமிட்டு பறந்து கொண்டேயிருந்தது. பின்பு அந்த கம்பத்தில் வந்து அமர்ந்தது. இதையெல்லாம் கவனித்த காட்டுவாசிகளின் தலைவன், இவனிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று நினைத்து மண்டியிட்டு வணங்க ஆரம்பித்தான். ஜோசப் அண்ணனை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான்.

 

பாஷை புரியாததால் இயேசு கிறிஸ்துவின் சிலுவை காட்சியை படமாக வரைந்து செய்கையால் அவர்களோடு பேசினார். காட்டுவாசிகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லி கொடுத்தார். மண்ணை தோண்டி நிலத்தை பயிரிட, வேலை செய்ய கற்றுக்கொடுத்தார். இவரது அன்பான நடத்தையின் மூலம் அந்த கிராமத்தையே இயேசுவுக்கு சொந்தமாக்கிவிட்டார். இதற்கெல்லாம் காரணம் வேத வசனம் அவர் இருதயத்தில் மிகப்பெரிய ஆயுதமாய் இருந்தது. அந்த வசனம் என்ற ஆயுதம்தான் ஜோசப் அண்ணனை பாதுகாத்து, சாட்சியாய் நிறுத்தியது. பயம் வரும்போது, ஆபத்து வரும்போது, இருதயத்தில் வசனம் இருந்தால்தானே சொல்ல முடியும். அப்போ நீங்க daily வசனம் மனப்பாடம் செய்யணும். Online class, exam எல்லாம் கிடையாது. Leave தானே. வசனத்தை நல்லா மனப்பாடம் செய்யணும். என்ன குட்டீஸ், ஜோசப் அண்ணா 121ஆம் சங்கீதத்தை சொல்லியே வெற்றியா வாழ்ந்தாங்க பார்த்தியா? நீயும் வேதத்தை படித்து, மனனம் செய்து அதன்படி நடந்து, இயேசுவுக்கு பிரியமாய் வாழணும். Ok தானே.

- Mrs. லீபனோன் ராஜ்குமார்    

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al