Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.08.2025
Share:

By Village Missionary Movement

Monday, 11-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 11.08.2025

 

மறந்துவிட்டீர்களா?

 

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" - ஏசாயா 49:15

 

மாலை நேரம், விடுதி ஒன்றிற்கு ஊழியம் செய்வதற்காக சென்றிருந்தேன். விடுதியின் வாசல் கதவின் அருகில் நின்று ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள். ஏன் அழுகிறாய் என்று கேட்டேன். அந்த சிறுமி சொன்ன பதில் என்னை வெகுவாய் அசைத்தது. இந்த பள்ளி விடுதியில் என்னை சேர்த்து விட்டு என் அம்மாவும், அப்பாவும் என்னிடம், "வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை உன்னை கூப்பிட வருவோம். எனவே கவலைப்படாமல், தைரியமாய் இந்த விடுதியில் இரு" என்று சொல்லி சென்றுவிட்டார்கள். இப்பொழுது ஒரு வருடமும் ஆகிவிட்டது. ஆனால் இது வரை என்னை அழைத்துச் செல்வதற்கு யாருமே வரவில்லை. என் அம்மாவும், அப்பாவும் என்னை மறந்து விட்டார்கள் என கண்ணீர் மல்க கூறினாள். 

 

வேதத்திலும் இதே போல ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது. சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கர்த்தர் ஈசாயின் மகனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யும்படியாக அனுப்பினார். அங்கு சென்ற பின் ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப் பண்ணினார். பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லி, ஈசாயிடம் உன்பிள்ளைகள் இவ்வளவுதானா என்று கேட்ட போதுதான் தன் இளைய மகனான தாவீதை மறந்தது ஈசாயின் ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஈசாய் இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றார். இப்படியாக சொந்த மகனையே மறந்து விட்ட தகப்பனை பார்க்கிறோம்.

 

அன்பானவர்களே! அந்த சிறுமியை மறந்துவிட்ட பெற்றோரை போலவும், பிள்ளையை மறந்து போன தகப்பனை போலவும் எல்லோராலும் மறக்கப்பட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். நம் குடும்பத்தார் நம்மை மறப்பது எத்தனை வேதனை தரக்கூடியதாய் இருக்கிறது. "மறப்பது" எத்தனை வேதனையானது என தெரிந்திருக்கும் நாம் அநேக நேரங்களில் தேவனை மறந்து விடுகிறோமோ என நினைத்துப் பார்த்ததுண்டா? நாம் ஆண்டவரிடம் பண்ணின பொருத்தனைகளையும், உடன்படிக்கையையும் மறந்துவிடுகிறோம். ஆண்டவர் நம்மை இரட்சித்து, அபிஷேகித்து, நம்மை தெரிந்துகொண்ட விதத்தையும் நாம் மறந்து மனம் போல வாழ்கிறோம். அவர் செய்த நன்மைகளையும், தந்த ஆசீர்வாதத்தையும் மறந்து நன்றியற்றவர்களாக பல நேரங்களில் இருக்கிறோம். அப்பொழுதெல்லாம் தேவனின் இருதயமும் இப்படிதான் வேதனைப்படுமல்லவா? இன்றே சிந்திப்போம். இயேசுவுடன் கிட்டி சேருவோம்.  

- Bro. எபிநேசர்

 

ஜெபக்குறிப்பு:-

உட்காரும் இடம், வாகனங்களை நிறுத்தும் இடங்கள் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al