Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.08.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 10-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 10.08.2025 (Kids Special)

 

தீமை செய்யாதே

 

"பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்" - நீதி. 10:12      

 

ஒரு அழகான காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் எல்லாம் படத்தில் பார்த்திருப்பீர்கள் தானே! எங்க சொல்லுங்க பார்க்கலாம். சிங்கம், புலி, கரடி, ஒட்டகம், மான், குதிரை O.K...O.K... ரொம்ப அழகா சொல்லிட்டீங்களே. இந்த காட்டில் குதிரைக்கும், மானுக்கும் அடிக்கடி சண்டை வருமாம். இந்த மானை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று குதிரை நினைத்தது. அதற்கு யாரிடத்தில் உதவி கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு மனிதனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அந்த மனிதனிடம் தன் நிலையை சொல்லி உதவி கேட்டது. அவனும் O.K சொல்லிவிட்டு, நாளை சந்திக்கலாம் என்றான். குட்டீஸ், ஒரு நாளும் மற்றவங்களை அடிக்கவோ, அழிக்கவோ நினைக்கக் கூடாது. இது சாத்தானின் செயல்கள். அவனை எதிர்த்து நிற்கணும் O.K வா. அடுத்து என்ன நடந்தது? அந்த மனிதனும் தனக்கு லாபம் கிடைத்தது என்று எண்ணி, மானை கொன்று நாம் சாப்பிடலாம். பின்பு குதிரையை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான். மானை பிடிக்க உனக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று சொல்லி அந்த குதிரைக்கு நிறைய பயிற்சிகளை கொடுத்தான். ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.  

 

சரியான நேரத்திற்கு ஆகாரம் கிடைக்கவில்லை. அவன் சொல்வதை மட்டுமே கேட்டு கேட்டு ரொம்ப வேதனையாய் இருந்தது. நான் காட்டில் இருக்கும் போது எவ்வளவு சுதந்திரமாக இருந்தேன். இப்பொழுதோ என் நண்பர்கள், என் குடும்பத்தை இழந்து இந்த மனிதனுக்கு அடிமையாக இருக்கிறேனே! சரியான சாப்பாடு கூட கிடைக்கவில்லையே! அந்த மானை அழிக்க நினைத்ததால் எனக்கு கிடைத்த தண்டனை இது. ச்சே, சமாதானமாய் வாழ்ந்திருக்கலாம் என்று குதிரை வேதனைப்பட்டு தன் நிலையை உணர்ந்தது. தவறு செய்கின்ற ஒவ்வொருவருக்கும் தண்டனை உண்டு என்பதை புரிந்து கொண்டது.

 

என்ன குட்டீஸ்! Animals மூலமா நல்ல பாடம் கத்துக்கிட்டீங்களா? உங்களுக்குள் சின்ன சின்ன சண்டை வந்தாலும், சமாதானம் பண்ணி உடனே சரி செய்து கொள்ளணும். அதை விட்டுட்டு, பகையை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, இயேசப்பாவுக்கு விரோதமாய் செயல்படக்கூடாது. சின்ன வயதிலேயே Jesus ன் அன்பினால் நீங்க நிரப்பப்படணும். Daily இயேசப்பா கிட்ட Prayer பண்ணி கோபம், வெறுப்பு, கசப்பு இப்படி Jesusக்கு விரோதமான காரியங்களை விட்டு விட உதவி கேட்கணும். O.K வா குட்டீஸ். கண்களை மூடி சொல்லுங்க, "இயேசப்பா, நீர் வெறுக்கிற காரியங்கள் எனக்குள் மறையட்டும். நீர் விரும்பும் காரியங்கள் எனக்குள் வளரட்டும் இயேசப்பா, ஆமென்."

- Mrs. அனிதா அழகர்சாமி

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet casibom bets10 extrabet royalbet süperbetin casibom giriş casibom jojobet giriş casibom milanobet piabellacasino betpas bahiscasino atlasbet betpas casinoroyal bahiscasino ngsbahis betplay holiganbet jojobet casibom holiganbet jojobet casibom vaycasino romabet