Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30.07.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 30-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 30.07.2025

 

கர்த்தர் சர்வ வல்லவர் 

 

"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக்கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்,..." - சங்கீதம் 50:15

 

நான் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி என் தேவாதி தேவனை அறிந்து இரட்சிக்கப்பட்டேன். அன்றைய தினம் 14 வயது நிரம்பிய எனது சிறிய மகன் படிப்பின் மேல் நாட்டமில்லாமையால் வீட்டை விட்டு ஓடி, தன்னுடைய நண்பர்களோடு கூட டூவீலரை எடுத்துக்கொண்டு அதிகாலையில் சென்றபொழுது எதிரே வந்த வாகனத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். எங்களது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் உங்கள் பிள்ளை மரித்து விட்டான், எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொன்னார்கள். அதை நான் எற்றுக் கொள்ளாமல் என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று மருத்துவர்களிடம் கதறினேன். அவர் உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு. ஒரு ஸ்கேன் செய்து பார்ப்போம் என்றார். கண்ணீரோடு நின்ற எனக்கு மருத்துவரே பணம் கொடுத்து உதவி செய்தார். ஸ்கேன் ரிசல்டில் கொஞ்சம் உயிர் இருக்கிறது என்றதும் மருத்துவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறோம் என்றார்கள். அப்பொழுது சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட ஒரு சொப்பனம் என் நினைவிற்கு வந்தது. அதில் நாங்கள் குடும்பமாய் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பேரழிவு வந்து எங்களை மூடுகிறதாகவும், நாங்கள் அழிகிறதாகவும் இருந்தது. அப்பொழுது நான் என் கண்களை மூடி தலையில் முக்காடிட்டு, எனது வலது கரத்தை வானத்துக்கு நேராக உயர்த்தி ஆண்டவரே, என்று அபயமிடுகிறேன். அப்பொழுது அவர் கரம் என் கையை பிடித்தது. நான் என் கண்ணை திறந்து பார்த்தபோது அது சமாதானமான ஸ்தலமாக இருந்தது. சொப்பனம் கண்ட நாளில் விக்கிரக கோவிலுக்கு மாலையிட்டிருந்தேன். ஆகவே இதை யாரிடமும் சொல்லவில்லை.

 

இந்த சொப்பனம் அந்த நேரத்தில் நினைவுக்கு வரவே, மருத்துவமனையில் உள்ள பாத்ரூம் கதவை அடைத்துக் கொண்டு, முழங்கால்படியிட்டு, தலையில் முக்காடிட்டு என் வலது கரத்தை வானத்துக்கு நேராக உயர்த்தி ஆண்டவரே, என்று கதறி அபயமிட்டேன். பின்பு நான் என் மகனிடம் வந்த போது அவன் தானாகவே எழுந்து இரத்த வாந்தி பண்ணினான். சுற்றி நின்ற மருத்துவர்கள் பிரமித்துப் போனார்கள். அப்பொழுது என் அருகேயிருந்த சகோதரி அம்மா, நீங்க எந்த சாமியை கும்பிட்டீங்க அவரை இன்னும் கும்பிடுங்க கும்பிடுங்க என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் மேலும் ஜெபித்தேன். என் பிள்ளை மீண்டும் எழுந்து இரத்த வாந்தி பண்ணினான். என் தேவாதி தேவனே சிறந்த வைத்தியர் என்று கண்டேன். சில நாட்களில் பூரண ஆரோக்கியம் உள்ளவனாய் என் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். நம் தேவனாகிய கர்த்தர் அற்புதங்கள் செய்கிறவர். இன்றும் உங்கள் வாழ்க்கையிலும் கிரகிக்க முடியாத காரியங்களைச் செய்ய வல்லவர். சூழ்நிலை எதுவானாலும், மனிதர்களெல்லாம் கைவிட்ட நிலையில் இருந்தாலும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். கர்த்தர் பெரிய காரியம் செய்வார்.

- B. மல்லிகா (எ) சாராள் 

 

ஜெபக்குறிப்பு:-

எழுப்புதல் வாலிபர் முகாமிற்காக நம்மோடு இணைந்து செயல்படும் தன்னார்வலர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al