Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.07.2025
Share:

By Village Missionary Movement

Monday, 28-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 28.07.2025

 

திக்கற்றவர்களின் தேவன் 

 

"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்,..." - யோவான் 14:18

 

என் குடும்பம் ஆண்டவரை அறியாத குடும்பம். நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே என் அப்பா மரித்து விட்டார். அப்பா முகத்தை பார்த்ததேயில்லை. கூலி வேலை செய்து வளர்த்த என் அம்மா தான் என் உலகம்! நான் 8 ஆம் வகுப்பு முடித்த நாட்களில், VBS மூலம் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். இனிப்பு பண்டங்களுக்காக மட்டுமே VBS சென்ற நான் அவற்றைவிட மிகவும் இனிமையானவரை பெற்றுக் கொண்டேன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது ஞானஸ்நானம் பெற்றேன்.

 

என் அம்மா நோய்வாய்பட்டு நான் 12 ஆம் வகுப்பு படித்தபோது மரித்துப் போனார்கள். என் அக்கம் பக்கத்தினர் என்னிடம் "இயேசு, இயேசுன்னு போனியே, இப்போ அனாதை ஆயிட்டியே" என்றார்கள். எனக்கு வேதனைக்கு மேல் வேதனை! நான் இயேசு கிறிஸ்துவை அறிந்ததினால் எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்த போதும் அது தவறு என்பது தெரிந்திருந்தது.

 

எங்கள் சபையிலுள்ள ஒரு ஆவிக்குரிய தாயார் எனக்கு ஆறுதல் சொல்லி உதவினார்கள். மேலும் ஒரு சந்தோஷமான செய்தியை கூறினார்கள். என் அம்மா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் வீட்டிற்கு வந்ததாகவும், ஆண்டவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். அவர்களின் இரட்சிப்புக்காக நான் செய்த ஜெபங்களுக்கு ஆண்டவர் பதிலளித்ததை எண்ணி நன்றி செலுத்தினேன். எங்கள் சபையின் போதகர் என்னை மேல் படிப்பு படிக்க வைத்தார். பைபிள் காலேஜிக்கும் சென்று படித்தேன். பின்பு BCA பட்டப் படிப்பையும் முடிக்க கிருபை செய்தார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரும் இறந்து போனார். ஒரு நாள் என் கையில் வெறும் இருபது ரூபாயை வைத்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றேன். திக்கற்ற பிள்ளைகளை தள்ளாத தேவன் அந்த ஆவிக்குரிய தாயார் மூலம் அன்பையும் அரவணைப்பையும் எனக்கு கொடுத்தார்.

      

 அவர்கள் என்னை 2021 ஆம் ஆண்டு நமது கிராம மிஷனெரி இயக்க வளாகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது ஆவியானவர் 2013 ல் நடைபெற்ற வாலிபர் முகாமில் மிஷனெரி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்ததை எனக்கு நினைவுப்படுத்தினார். அந்த வாரம் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில் செய்தி வேளையில் டேவிட் கணேசன் அண்ணன் "'நீ ஆண்டவரிடம் கேட்ட ஆறுதலின் இடம் இதுவே" என்றார்கள். என் திருமணத்தை குறித்து 1% கூட யோசிக்காத எனக்கு நல்ல ஊழியக்கார கணவர், அன்பான மாமனார் மாமியாரை ஆண்டவர் எனக்கு கொடுத்தார். ஒரு பெண் குழந்தையும் கொடுத்தார். எவ்வளவு நல்ல ஆண்டவர் பாருங்கள்.

          

எனக்கன்பானவர்களே! ஆண்டவர் என்னை கைவிடவில்லை, என்னை விட்டு விலகவுமில்லை. என் திக்கற்ற நிலையை மாற்றி இப்பொழுது குடும்பமாக ஊழியம் செய்து வருகிறோம். இதே போல நீங்களும் அனேக இழப்புகளை சந்தித்திருக்கலாம், திக்கற்று போய் இருக்கலாம். கவலைப்படாதீர்கள் ஆண்டவர் தாமே உங்களுக்கு உதவி செய்வார் ஆமென்.    

- Mrs. எஸ்தர் மனோஜ் 

 

ஜெபக்குறிப்பு:-

எழுப்புதல் வாலிபர் முகாமில் கலந்து கொள்ளும் வாலிபர்கள் இயேசுவின் அன்பையும், இதய துடிப்பையும் அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al