Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.07.2025
Share:

By Village Missionary Movement

Thursday, 24-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 24.07.2025

 

சொன்னதை நிறைவேற்றுவார்

 

"குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது;... அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" - ஆபகூக் 2:3

 

எனக்கு 2001 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் என்னை அற்பமாக எண்ண ஆரம்பித்தனர். இதனால் கண்ணீர் கவலையுடன் விசேஷ வீடுகள் என எங்கும் செல்லாமல் இருந்தேன். அப்போது ஒருமுறை ஜெபிக்கும் போது, "மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப் பண்ணுவேன்" என தேவன் வாக்குப் பண்ணினார். வாக்குத்தத்தம் வந்ததும் கொஞ்சம் மனதில் ஆறுதல் வந்தது. என் ஜெபம் மாறியது, நன்றி சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தேன்.  

 

வாக்குத்தத்தம் வந்து இரண்டாவது வருஷம் 2006 ம் ஆண்டு ஏப்ரலில் கருத்தரிக்க உதவி செய்தார். ஜூலை மாதம் சிக்குன்குனியா காய்ச்சல் வந்து, முகம் முதல் கால் வரை வீக்கம் கண்டது. வயிற்றில் குழந்தை இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க பயந்தனர். ஆனால் காய்ச்சலைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சிகிச்சை கொடுத்தனர். மூன்று நாட்களுக்கு பின் காய்ச்சல் குறைந்தது. நான் தொடர்ந்து வாக்குத்தத்தத்தை பிடித்து ஜெபித்தேன். செப்டம்பரில் மீண்டும் காய்ச்சல், இதே போல் வீக்கம். இரண்டு நாட்களில் காய்ச்சல் சரியானது, ஆனால் குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை. உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றனர். நான் ஸ்கேன் ரூமுக்குள் சென்றதும் அம்மா நர்சிடம் விசாரித்த போது அதிர்ச்சியானார்கள், ஏனென்றால் 5 மாதமாக இருக்கும்போது சிக்குன்குனியா வந்து சிகிச்சை எடுத்ததால் குழந்தை இறந்து விட்டது என்றார்கள். ஆனால் என்னை பரிசோதித்த டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறது என்றார்கள். 

 

நான் தொடர்ந்து வாக்குத்தத்தத்தை வைத்து ஜெபித்தேன். டிசம்பரில் ஆப்ரேஷன் செய்து எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது டாக்டர் என்னிடம் உன் ஜெபம் கேட்கப்பட்டது. சிக்குன்குனியா வந்த அநேகருக்கு குழந்தை இறந்து விட்டது. ஆனால் உன் குழந்தை ரொம்ப ஆக்டிவா, சூப்பரா இருக்குது என்றார்கள். அப்போது நான் தேவன் எனக்கு வாக்குப் பண்ணினபடியே ஆரோக்கியமான குழந்தையை தந்தார் என எண்ணி துதித்தேன். 

 

பிரியமானவர்களே! உங்களது வாழ்விலும் தேவன் வாக்குப் பண்ணியிருப்பார் என்றால் சூழ்நிலை பார்க்காமல், வாக்குத்தத்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தொடர்ந்து ஜெபியுங்கள். தேவன் அதனை மெய்ப்பிக்கச் செய்து சுதந்தரிக்கச் செய்வார். நம் தேவன் வார்த்தையால் சொன்னதை கரங்களினால் நிறைவேற்றுகிற தேவன். எனவே அவர் தாமே உங்களை அற்பமாய் எண்ணியவர்கள் ஆச்சரியப்படவும், தங்கள் வாயினால் தேவனுடைய அற்புதத்தைப் பற்றி பேசவும் செய்வாராக, ஆமென். 

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:-

வாலிபர் எழுப்புதல் முகாமிற்காக You tube, ஆமென் வில்லேஜ் டி.வியில் விளம்பரம் பார்க்கிற யாவரும் முகாமில் கலந்து கொள்ள, முகாமிற்காக செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş