Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-05-2021
Share:

By Village Missionary Movement

Friday, 28-May-2021

இன்றைய தியானம்(Tamil) 28-05-2021

தாழ்மை 

 

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்;…” – மத்தேயு 11:29 

 

உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டத்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை வென்று உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி. இரண்டு அணி வீரர்களும் திறமையாக விளையாடினர். ஆனால் கூடுதல் நேர விளையாட்டில் ஜெர்மனி வீரர் மரியோ கோல் அடித்து வெற்றியை தன் நாட்டு வசமாக்கினார். இவர் தன்னுடைய முகபுத்தக பகுதியில் தேவனுக்கு நன்றி செலுத்தி பதிவிட்டார். தனது வெற்றிகள் அனைத்தையும் தேவனுடைய பாதத்தில் தாழ்மையாக அர்ப்பணித்து அமைதியாக காட்சி தரும் இவர் ஒர் தீவிர விசுவாசியாவார். அதிகமாய் ஆண்டவரை நேசிக்கும் இவர், உலக வரலாற்றில் இடம்பிடித்த போதும், “தேவனே உம்மிடம் நான் எதையும் கேட்கவில்லை, ஆனால் நீர் கொடுத்திருக்கிற அனைத்திற்காகவும் நன்றி சொல்கிறேன்” என்று தாழ்மையாக கூறியிருப்பது ஆச்சரியமே.

 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் என்று சொல்கிறார். அவர் சிலுவையில் மரணபரியந்தம் தன்னைத் தாழ்த்தினார் என்று வேதம் சொல்கிறது. இயேசுவானவர் பூமியில் வாழ்ந்த நாட்களில் அவருடைய ஊழியப் பாதையிலே தன்னோடிருந்த சீஷர்களுக்கு தாழ்மையைக் கற்றுக் கொடுத்தார். சீஷர்களுடைய கால்களையும் கழுவி தாழ்மையை வெளிப்படுத்தி, வாழ்ந்தும் காண்பித்தார். இப்படி நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியை வைத்து விட்டு சென்றுள்ளார். 

 

அன்பானவர்களே! மேன்மைக்கு முன்னானது தாழ்மை. நமக்கு தாழ்ந்திருக்க தெரிந்தால் தேவன் வாழ்ந்திருக்க வழிகாட்டுவார். யார் வேண்டுமானாலும் முயற்சித்தால் அறிவை பெற்றுக் கொள்ளலாம்; ஆனால் தாழ்மை உள்ளவர்கள் மட்டுமே கிருபையைப் பெற்றுக்கொள்ள முடியும். நாமே நம்மை தாழ்த்தி விட்டால் மற்றவர்கள் தாழ்மைப்படுத்த முடியாது. ஒரு தேவ மனிதர் சொன்னார், கட்டிலில் படுத்தால்தான் கீழே விழ நேரிடும், பாயில் படுத்தால் விழவேண்டியதில்லை என்று. ஆம், எங்கேயும், எப்போதும், எதிலும் தாழ்மையாயிருப்போம். நம் வாழ்விலும், செயலிலும், சிந்தையிலும் இயேசுகிறிஸ்துவைப் போல தாழ்மையைத் தரித்துக் கொள்வோம். தாழ்மையோடிருப்பவர்கள் உயர்த்தப்படுவது நிச்சயம். ஆகவே தாழ்மையோடிருந்து கிருபையையும், தேவனால் வரும் உயர்வையும் பெற்று இவ்வுலகிலே ஆசீர்வாதமாய் வாழ்வோம்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

நமது மிஷனெரி வாலிப பிள்ளைகளுக்கு தேவன் நல்ல வாழ்க்கை துணையை தர ஜெபியுங்கள்.    

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş jojobet giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş