Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.07.2025
Share:

By Village Missionary Movement

Monday, 21-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 21.07.2025

 

கைவிடாத கன்மலை

 

"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார்" - சங்கீதம் 27:10

 

நான் தென்காசி மாவட்டத்தில் ஒரு கிராமப் பகுதியில் பிறந்தேன். எனது 3 வயதில் என் தகப்பனார் மரித்துவிட்டார். என் கூட பிறந்தவர்கள் மூன்று பேர். எங்கள் அம்மாவிற்கு எங்களை எப்படி வளர்க்கப் போகிறோம் என்கிற பயம். அதனால் என் தாய் மாமா, என்னை நாகலாந்துக்கு அழைத்துச் சென்றார். எனக்கு 17 வயதாகும்போது என் தாயார் என்னைத் தேடி வந்தார்கள். அவங்க தான் எங்க அம்மா என்றும் எனக்கு சகோதரிகள் இருக்கிறார்கள் என்றதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்க அம்மா என்னை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று, நீ வேலைக்கு போய் சம்பாதித்து பணம் கொண்டு வா என்று சொல்லி அனுப்பினார்கள். நான் சம்பளம் வாங்குவதற்கு முன்பாகவே என் தாயார் வந்து அதை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.   

 

ஒரு நாள் எங்க முதலாளி என்னை இரவு வேலைக்கென்று ஒரு தேவாலயத்திற்கு கூட்டிட்டு போனார்கள். அங்குள்ள சுவரில் "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக" என்று எழுதியிருந்த வசனத்தைப் பார்த்தேன். என் முதலாளியிடம், அந்த சுவரில் என்ன எழுதி இருக்கிறது? என்று கேட்டேன். அவர்கள் எனக்கு இயேசுவைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். நான் வீட்டுக்கு வந்து எங்க அம்மாவிடம், நான் உங்களுக்கு கீழ்ப்படிகிறேன் என்று சொன்னேன். பின்பு வெளியூருக்கு வேலைக்கு போய் சம்பாதித்து அம்மாவிடம் கொடுத்தேன். ஒரு நாள் எனக்கு கால் வீக்கம் ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்து எனக்கு blood cancer என்று சொல்லி என்னை சென்னையிலுள்ள அடையார் மருத்துவமனையில் போய் சேர சொன்னார்கள். அங்கு என் அம்மா என்னை தனியாக விட்டுவிட்டு வீடு திரும்பி விட்டார்கள். நான் அனாதையாக மருத்துவமனையில் ஆறு மாதமாக யாராவது என்னை பார்க்க வரமாட்டார்களா என்று ஏங்கினேன். நான் படுத்த படுக்கையாக இருந்தபொழுது ஒரு நாள் எங்க முதலாளி போன் பண்ணி," இயேசு உன்னை ரொம்ப நேசிக்கிறார்" என்று கூறினார். அன்றே நான் எழும்பி நடக்க ஆரம்பித்தேன், பேச ஆரம்பித்தேன். டாக்டர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள. நான் உடனே அவர்களிடம் இயேசு எனக்கு சுகம் கொடுத்தார் நான் வீட்டுக்கு போறேன் என்றேன். அவர்கள் நீ இன்னும் இருபது நாட்களில் இறந்து விடுவாய் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். 

 

அப்பொழுது இயேசு கிறிஸ்துவை எனக்கு அறிமுகம் செய்த என் முதலாளி என்னை ஒரு சபையில் சேர்த்து விட்டார். இயேசுவின் அன்பை அறிந்து கொண்டு, பின்பு ஒருநாள் கிராம மிஷனெரி இயக்க ஊழியத்தை கேள்விப்பட்டு, அந்த ஊழியத்தில் சேர்ந்தேன். ஆண்டவருடைய கிருபையால் நாங்கள் குடும்பமாக சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்து வருகிறோம். அன்பானவர்களே, எல்லாரும் என்னை விரட்டி விட்டார்கள், நான் தனித்து விடப்பட்டிருக்கிறேனே! எனக்கு அடைக்கலம், ஆறுதல், அன்பு எங்கு கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களோ? கலங்காதீர்கள். ஆண்டவரிடம் வாருங்கள் அவர் உங்களைச் சேர்த்துக் கொள்ளுவார்.    

- Bro. அருண் ஐயப்பன்

 

ஜெபக்குறிப்பு:-

ஆகஸ்ட் 15 முகாமிற்கான ஆயத்த பணிகளில் கர்த்தரின் கரம் உடனிருக்க ஜெபியுங்கள்..

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al