Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.07.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 20-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 20.07.2025 (Kids Special)

 

முழுவதும் இயேசுவுக்கு 

 

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக..." - மாற்கு 12:30

 

Hello குட்டீஸ்! நீங்க எல்லாம் Airport போயிருக்கீங்களா? அங்கே அழகான Aeroplane, Helicopter எல்லாம் இருக்கும் தானே. சொல்லும்போதே அதுல போகணும்போல ஆசை வருதா. ஜெபம் பண்ணுங்க போயிடலாம் o.k வா, இப்ப கதைக்குள்ளே போவோமா? உன் வாழ்க்கை முழுவதையும் இயேசப்பாவிடம் கொடுத்தால் ஆசீர்வாதம் என்பதை நீ புரிந்து கொள்ளும் விதத்தில் ஒரு கதை சொல்லுகிறேன் கவனமாய் கேளு...

 

ராஜன் uncle ஒரு Airport அருகில் ஒரு இடம் வாங்கி அதில் ஒரு பெரிய மாளிகை வீடு கட்டினார். கட்டும்போதே இயேசப்பாவுக்கென்று ஒரு தனி room கட்டினார். கஷ்டப்பட்டு வீடு கட்டி முடித்து பிரதிஷ்டையும் பண்ணிவிட்டார். இவர் பிள்ளைகள் எல்லாம் வீட்டு மாடியில் நின்று Aeroplane ஐ ரசிப்பார்கள். ராஜன் uncle இயேசப்பாவுக்கென்று கட்டின அந்த room சாவியை இயேசப்பாவிடம் கொடுத்து அவரை அந்த room ல் தங்க வைத்தார். இயேசப்பாவும் உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டார்.

 

கொஞ்ச நேரத்திற்கு பிறகு வீட்டின் முன் வாசல் கதவு தட்டப்பட்டது. ராஜன் uncle வேகமாக போய் கதவைத் திறந்தார். அங்கே பார்த்தால் இரண்டு கொம்புகளுடன் கருப்பு நிறத்தில் குண்டாக சாத்தான் நின்று கொண்டிருந்தான். உடனே ராஜன் uncle அவனை உள்ளே வரவிடாமல் கதவை மூட முயன்றார். சாத்தானோ வெளியிலிருந்து கதவைத் தள்ளினான். இவரும் உள்ளே இருந்து கதவைத் தள்ள பெரிய போராட்டமே நடந்தது. எப்படியோ கதவை மூடி தாழ்பாழ் போட்டுவிட்டு பெருமூச்சு விட்டார். பின்பு அவருக்கு ஒரு யோசனை வந்தது. இத்தனை போராட்டம் நடந்தும் இயேசப்பா எட்டிக்கூட பார்க்கவில்லையே என்று! இயேசப்பா இருந்த அந்த room கதவைத் தட்டினார். இயேசுவும் கதவைத் திறந்தார். உடனே ராஜன் uncle இயேசுவே, இங்கு நடந்த போராட்டம் உமக்குக் தெரியாதா? கொஞ்சம் விட்டிருந்தால் சாத்தான் வீட்டிற்குள் வந்திருப்பான், இந்த இக்கட்டான சூழ்நிலையிலே எனக்கு உதவி செய்யாம போயிட்டீங்களே, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு என்றார். உடனே இயேசு ராஜன், நீ ஒரு room ஐ மட்டும் காட்டி இது மட்டும் தான் எனது room என்றும், மற்றதெல்லாம் உன்னுடையது என்னும் சொன்னாய். எனவே தான் எனக்கு கொடுத்த room ல் இருந்து விட்டேன். உன்னுடையதை நீ தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். ராஜன் uncle பதற்றத்தில் இல்லை இயேசப்பா, வீடு முழுவதும் உமக்குத்தான் சொந்தம் என்று சொல்லி வீட்டின் மொத்த சாவியையும் அவர் கையில் கொடுத்துவிட்டார். உடனே இயேசப்பா, இனிமேல் நீ கவலைப்படாதே எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சந்தோஷமாயிரு என்றார்.

 

குட்டி தம்பி தங்கச்சி! இயேசப்பா உன்கிட்டேயும் இதைத்தான் எதிர்பார்க்கிறார். உன் வாழ்க்கையை முழுவதுமாக இயேசப்பாவின் கரங்களில் கொடுக்கும் போது இயேசப்பா உன்னையும், உன் குடும்பத்தையும், உன் எதிர்காலத்தையும், உனக்கான எல்லா தேவைகளையும் அவரே பார்த்துக்கொள்வார் o.k வா.

- Sis. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş