Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.07.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 13-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 13.07.2025 (Kids Special)

 

மறவாதே 

 

"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" - சங்கீதம் 103:2

 

ஆஸ்டின் என்ற பெரிய பணக்கார அண்ணனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ரோட்டில் நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவோரத்தில் குப்பைக்கிடங்கில் ஒரு பையன் குப்பைகளை கிளறி, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த நண்பர்கள் அதை Photo எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஆஸ்டின் அண்ணனோ அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சொன்றார். போகும் வழியில் நண்பர்கள் எல்லாரும் இவனுக்கு ஏதாவது பணம் கொடுத்து உதவி செய், உன்னோடு கூட்டிக் கொண்டு போகாதே, அது நன்றாக இருக்காது என்று திட்டினார்கள். ஆனால் ஆஸ்டின் அண்ணனோ அவனிடம் உன் பெயர் என்னவென்று அன்போடு கேட்டார். சிறுவன் தயங்கியபடியே என் பெயர் குமார், எனக்கு யாருமே இல்லை என்றான். சரி, வா உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி புது dress எடுத்துக் கொடுத்து, குளிக்கச் சொன்னார். பின்பு நான் உன்னை படிக்க வைக்கிறேன், நீ கவலைப்படாமல் என் வீட்டிலேயே இரு என்று குமாரை தன் தம்பியைப் போல் கனிவோடு பார்த்துக் கொண்டார்.   

 

குமார் school போக ஆரம்பித்தான். நன்றாக படிப்பான், பாடல் பாடுவான், நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றான். வருடங்கள் கடந்தன, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்கு நிறைய கெட்ட நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கவும், கெட்ட பழக்கங்களையும் கற்றுக் கொண்டான். ஆஸ்டின் அண்ணன் செய்த நன்மைகளை மறக்க ஆரம்பித்தான். அவர்களை ஏமாற்றி பணத்தை வாங்கிக் கொண்டு சினிமா பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் சிகரெட் பிடித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான். அண்ணனைப் பார்த்ததும் நல்ல பிள்ளையைபோல் நடிக்க ஆரம்பித்தான். உண்மையை அறிந்த ஆஸ்டின் அண்ணன் தவறான வழியில் செல்லக் கூடாது என்று அறிவுரை கூறினார். கெட்ட நண்பர்களை விட்டு விலகு என்று எவ்வளவோ சொல்லியும் குமார் கேட்பதாக தெரியவில்லை. என் நண்பர்களை குறைசொல்ல நீங்கள் யார்? என்று கேட்டு விட்டான் குமார். cell phone ல எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் இருந்தார் ஆஸ்டின் அண்ணன். எனக்கு phone வேணும் தாங்க என்று வாங்கினவன் போனிலுள்ள போட்டோவை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்தது. அது பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்தது. குப்பைத் தொட்டியின் அருகே நின்று எடுத்த photo. அதைப் பார்த்ததும் தன் நிலையை உணர்ந்து, குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த என்னை படிக்க வைத்து அழகு பார்த்த ஆஸ்டின் அண்ணனின் அன்பை நினைக்கும் போது, உள்ளம் உடைந்து அழ ஆரம்பித்தான். ஆஸ்டின் அண்ணனிடம் மன்னிப்பும் கேட்டான். அண்ணன் அன்போடு குமாரை அரவணைத்துக் கொண்டார்.

 

அன்பு குட்டிச் செல்லங்களே! JESUS நமக்கு எவ்வளவு நன்மை செய்திருக்காங்க. நிறைய நேரத்தில் மறந்து விடுகிறோம். இல்லையா? அப்படி இருக்கவே கூடாது குட்டீஸ். ஜீவன், சுகம், பெலன்... இன்னும் நிறைய சொல்லிக் கொண்டேபோகலாம். இத்தனை நன்மை செய்த JESUS க்கு நன்றியுள்ள பிள்ளைகளாய் வாழ வேண்டும் குட்டீஸ் o.k வா.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al