By Village Missionary Movement
Wednesday, 09-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 09.07.2025
நம்மை இரட்சிப்பவர்
"...நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்" - வெளி. 3:15
ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு சபைக்குச் செல்கிற பழக்கமிருந்தது. ஆனால் வேதம் வாசிக்கிற பழக்கமில்லை, கர்த்தருக்கு பயந்து நடக்கிற வாழ்க்கையுமில்லை. உலக பிரகாரமான வாழ்க்கை தான் இருந்தது. இரட்சிப்பு இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். என்னுடைய அப்பா, அம்மா, ஒருவர் பின் ஒருவர் மரணம் அடைந்த போது என்னுடைய வாழ்க்கை இருள் போன்று தோன்றியது. இப்படிப்பட்ட நேரத்தில் நான் ஒரு அக்கா வீட்டில் நடக்கிற ஜெபக்கூட்டத்திற்கு போயிருந்தேன். அங்கே வந்த ஊழியக்காரர் வேதத்தை வாசித்தார். அதில் " நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்" என்ற இந்த வசனமானது என் இருதயத்தை தொட்டது. நான் வேதத்தை எடுத்து படிக்க, படிக்க இயேசுவை அறியும் அறிவு எனக்குள் அதிகமாக பெருக ஆரம்பித்தது. அப்பொழுது என்னிடம் மன மாறுதல் ஏற்பட்டு இரட்சிக்கப்பட்டேன்.
1963 ஆம் ஆண்டு பிறந்த நான், 1984 ல் தான் இரட்சிக்கப்பட்டேன். இரட்சிப்பு என் வாழ்க்கையில் வந்த பின் என் பேச்சில், செயலில் சகலவற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. சபை ஆராதனையை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடாதபடி கடைபிடித்து வந்தேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்னை பைத்தியமென்றும், பெரிய பக்திமான் என்றும் என்னை ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள். இயேசுவை மையமாகக் கொண்டு வாழ ஆரம்பித்த போது கர்த்தருடைய ஆதரவும், அனுகூலமும் எனக்கு கிடைத்தது.
தாய், தகப்பனில்லாததால் திருமணம் எப்படி நடக்கும் என வேதனைப்பட்டேன். கர்த்தர் என்னுடைய மன வியாகுலத்தை அறிந்து எனக்கு1988 ல் திருமணம் நடைபெற உதவி செய்தார். நான் ஒரு ஊழியக்காரரைத்தான் திருமணம் செய்ய நினைத்தேன். ஆனால் என் திருமணத்திற்கு பிறகு என் கணவர் ஊழியத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, பைபிள் காலேஜ் சென்றார். அவர் படித்து முடித்தவுடன் எனது நல்ல வேலையை விட்டு விட்டு, என் கணவரோடு இணைந்து ஊழியம் செய்தேன். 1994 லிருந்து 2010 ம் ஆண்டு வரை சபை ஊழியம் செய்தோம். 2011 ம் ஆண்டு தொடங்கி 2025 வரை சபைகள் மத்தியில் ஊழியம் செய்து வருகிறோம். கடந்த ஓராண்டாக கிராம மிஷனெரி இயக்கத்தில் இணைந்து கர்த்தருக்கு ஊழியம் செய்து வருகிறோம்.
இதை வாசிக்கிற யாராவது பெயரளவில் கிறிஸ்தவர்களாய் இயேசு யாரென்று தெரிந்தும் இரட்சிக்கப்படாதவர்களாய் சபைக்கு சென்றும் சத்தியத்தால் விடுதலையாகாதவர்களாய் இருப்பீர்களென்றால், இரட்சிப்பு நமக்கு தூரமாயில்லை என்பதை அறியுங்கள். இன்றே இரட்சணிய நாள் அவரண்டை வந்துவிடுங்கள். ஆவலுடன் உங்களை அழைக்கிறார்.
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
பிலிப் காஸ்பல் குழு ஊழியத்தின் மூலம் சந்திக்கப்பட்ட கிராமங்கள் கர்த்தரை அறிய ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864