Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06.07.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 06-Jul-2025

இன்றைய தியானம்(Tamil) 06.07.2025 (Kids Special)

 

கீழ்ப்படிதலே உத்தமம்

 

"நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" - யோவான் 14:15 

 

Hello குட்டி செல்லங்களே! எப்படி இருக்கீங்க, புது Class செட் ஆகிடிச்சா? துவக்கத்திலிருந்தே பாடங்களை படிக்க ஆரம்பியுங்க அப்போது தான் பரீட்சை நேரம் பதற்றமாகாது. O.K. குட்டீஸ்! இன்றைக்கு Bible Story கேட்கப் போகிறோம். JESUS க்கு கீழ்ப்படிந்தால் புது blessing தான். அதை பற்றி தான் இன்றைக்கு உண்மையாய் நடந்த Bible சம்பவத்தை கேட்கப் போகிறோம்.

 

ரேகாபியர் என்ற குடும்பம் இருந்தாங்க. உங்க வீட்டில் யாரெல்லாம் இருக்கீங்க? அந்த காலத்தில் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா இப்படி joint family இருப்பாங்க. இதே போல தான் ரேகாபியர் family வாழ்ந்து வந்தாங்க. இவங்க என்ன செய்தாங்க தெரியுமா? இவர்களுடைய தகப்பன் யோனதாப் என்னவெல்லாம் சொன்னாரோ அதையெல்லாம் அப்படியே செய்தார்கள். ஆச்சரியமா இருக்குதா? நீங்க பெற்றோர் சொல்றதை எப்படி கேட்குறீங்க. உடனே கீழ்ப்படிவது கஷ்டமாகத்தான் இருக்குது. But ரேகாபியர் family கீழ்ப்படிந்ததை ஆண்டவரே பாராட்டுகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். எரேமியா என்ற தீர்க்கதரிசி மூலமாக சில காரியங்களை சொல்லி, கீழ்ப்படிய வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்த்தார். ஆனால் கீழ்ப்படியாத இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து ஆண்டவர் ரொம்ப வேதனைப்பட்டுத் தான் ரேகாபியர் family கீழ்ப்படிவதை சந்தோஷமாக சொல்கிறார். (எரேமியா 35)

 

அப்படி என்னதான் கீழ்ப்படிந்தாங்க என்று தானே நினைக்கிறீங்க. குடம் குடமாக, பாத்திரங்கள் நிரம்ப திராட்சரசமுள்ள ஒரு அறைக்கு ரேகாபியரை அழைத்துக் கொண்டு போய் திராட்சரசத்தை குடிக்கச் சொன்னார் எரேமியா தீர்க்கதரிசி. அவர்கள் நாங்கள் குடிக்க மாட்டோம் எங்கள் தகப்பன் யோனதாப், நீங்கள் திராட்சரசம் குடிக்காமல், வீட்டைக் கட்டாமல், கூடாரத்தில் குடியிருந்து திராட்ச தோட்டம் நடாமல் இருங்கள் என்று சொன்ன தகப்பனின் வார்த்தைக்கு இன்று வரை கீழ்ப்படிந்திருக்கிறோம் என்று சொன்னதும் எரேமியா தீர்க்கதரிசிக்கு ஒரே ஆச்சரியம். ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு அவர் பிள்ளைகள் கீழ்ப்படியவில்லை. இது ஆண்டவருக்கு எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதை நமக்கு உணர்த்தும் வண்ணமாக வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

 

செல்ல குட்டிகளே! நீங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியவில்லையென்றால் அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குமோ அதேபோலத்தான் JESUS சோட வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியவில்லையென்றால் JESUS ரொம்ப வேதனைப்படுவார். என்ன குட்டீஸ்! வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து, இயேசப்பாவை சந்தோஷப்படுத்த ரெடியா. கண்களை மூடி சின்ன ஜெபம் பண்ணுங்க. இயேசப்பா, உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, உம்மை சந்தோஷப்படுத்தி வாழ எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென். 

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al