By Village Missionary Movement
Thursday, 03-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 03.07.2025
தெரிந்து கொண்டார்
"...நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்..." - எரேமியா 1:5
என் பெயர் அழகர்சாமி. என் தகப்பனார் இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர். தாயார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர். நாங்கள் இயேசு கிறிஸ்துவை பற்றிய எந்த அறிவுமின்றி, பாவ வழிகளில் வேற்று தெய்வ வழிபாட்டில் வாழ்ந்து வந்தோம். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது டேவிட் கணேசன் அண்ணன் எங்கள் ஊருக்கு வந்து இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். சண்டே கிளாஸ் நடத்துவார்கள், அதில் கலந்து கொள்ள கர்த்தர் எனக்கு கிருபை செய்தார். அண்ணன் மூலமாக இயேசுவை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானமும் பெற்றேன். ஆண்டவர் எனக்கு டிப்ளமோ படிக்கவும் கிருபை செய்தார். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் எரேமியா 29 :13 என்ற வசனத்தின் படி கர்த்தரைத் தேட எனக்கு உதவி செய்தார்.
நல்ல வேலை கிடைத்தது. விடுமுறை நாட்களில் அண்ணனுடன் ஊழியத்திற்கும் சென்று கொண்டிருந்தேன். இந்நிலையில் ஒரு நாள் ஆண்டவர் என்னிடம், "உனக்காகவே நீ வாழ போகிறாயா அல்லது எனக்காக ஊழியம் செய்ய போகிறாயா"' என்று கேட்டார். அப்பொழுது என் வாழ்க்கையை இயேசப்பாவின் முழு நேர ஊழியத்திற்கென்று அர்ப்பணித்தேன். தமிழ்நாட்டில் இரண்டு வருடம் ஊழியம் செய்தேன். ஒரு நாள் காலை 8 மணிக்கு அண்ணன் என்னிடம், 'நீ ஆந்திரா போகவேண்டும். ரயில் பத்து மணிக்கு” என்று கூறினார்கள். உடனே கீழ்ப்படிந்து புறப்பட்டுச் சென்றேன். ஆண்டவர் அங்குள்ள மொழியை கற்றுக் கொண்டு அங்கேயே ஊழியம் செய்ய கிருபை தந்தார். கடந்த 20 வருடங்களாக ஆண்டவரின் பணியை ஆந்திராவில் செய்து வருகிறேன். அங்கும் முழு நேர மிஷனெரிகள், டியூஷன் மிஷனெரிகள் என மொத்தம் 86 ஊழியர்கள் இருக்கிறார்கள். இன்று வரை கர்த்தர் கொடுத்த தரிசனத்தில் ஒருமித்து ஓட ஆண்டவர் கிருபை தந்துள்ளார். எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், ஊழியத்திற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அன்பானவர்களே! நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவரா? என்னிடம் இடைப்பட்டு என்னை ஊழியத்திற்கு அழைத்தது போல ஆண்டவர் உங்களுடனும் பேசிக்கொண்டேயிருக்கிறாரா? அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியுங்கள். கீழ்ப்படியும் போது மாத்திரமே நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் மாற முடியும். ஆபிரகாமிடம் ஆண்டவர், நான் காட்டும் தேசத்திற்கு புறப்பட்டு போ என்று சொன்னபோது அப்படியே கீழ்ப்படிந்தார். To Address அதாவது போகும் இடம் எது என்று தெரியாமலேயே, கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். முடிவு, பூமியிலுள்ள சகல ஜனங்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது. கீழ்ப்படியுங்கள் மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
- Bro. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:-
Day Care Centre- லுள்ள பிள்ளைகள் இயேசுவின் சந்ததிகளாய் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864